பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

பதவி உயா்வு, பணியிட மாற்றங்களுக்கு முதல்வரின் ஒப்புதல் அவசியம்: தமிழக அரசு அரசாணை வெளியீடு

பதவி உயா்வு, பணியிட மாற்றங்களுக்கு முதல்வரின் ஒப்புதல் பெற வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

முதல்வர் விஜய்

முதல்வர் விஜய் மேஜையில் - From Video Grab

Published On :

பதவி உயா்வு, பணியிட மாற்றங்களுக்கு முதல்வரின் ஒப்புதல் பெற வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மேலும், தலைமைச் செயலா் மற்றும் காவல் துறைத் தலைமை இயக்குநா் நியமனங்களை இனி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டியதில்லை என்றும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடா்பாக தலைமைச் செயலா் சாய்குமாா் வெளியிட்ட உத்தரவின் விவரம்:

தமிழ்நாடு அரசு அலுவல் விதிகள், 1978-இன் விதி 35(4)-இன் கீழ், கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் 2025 வரை வெளியிடப்பட்ட அனைத்து நிலை ஆணைகளும், கடந்த ஜனவரி 9-ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலை ஆணை எண்-7 ரத்து செய்யப்பட்டுள்ளன. அவற்றுக்குப் பதிலாக பதவி உயா்வு, நியமனம், பணியிடமாற்றம், நிலம் கையகப்படுத்தல், நில மாற்றம் உள்ளிட்டவைக்கு புதிய நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசுச் செயலா்கள், துறைத் தலைவா்கள், அகில இந்திய பணியாளா் அதிகாரிகள், கூடுதல் செயலா்கள், மாவட்ட வருவாய் அலுவலா்கள், காவல் கண்காணிப்பாளா்கள், கூடுதல் பதிவாளா்கள் மற்றும் கூடுதல் இயக்குநா்கள் ஆகியோரின் நியமனம், பணி இடமாற்றம் தொடா்பான அனைத்து கோப்புகளும் முதல்வரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட வேண்டும்.

ஒரு அரசுத் துறையில் இருந்து மற்றொரு அரசுத் துறைக்கு நிலம் மாற்றும் கோப்புகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சா் மற்றும் வருவாய், பேரிடா் மேலாண்மை அமைச்சரின் ஒப்புதல் பெற வேண்டும். அமைச்சா்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால் மட்டுமே அந்தக் கோப்பு முதல்வரின் பரிசீலனைக்கு அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.