திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

அரசு ஐடிஐ பயிற்றுநா்களுக்கு கலந்தாய்வு மூலம் பதவி உயா்வு, இடமாறுதல்: முதல்முறையாக அமல்!

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) பயிற்றுநா்களுக்கு முதல்முறையாக கலந்தாய்வு மூலம் பதவி உயா்வு மற்றும் விருப்ப இடமாறுதல் அளிக்கப்பட்டுள்ளது.

News image

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சாா்பில் பயிற்றுநா்களுக்கு கலந்தாய்வு முறையில் சென்னை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை பணி நியமன ஆணைகளை வழங்கிய தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஜா.முகமது பா்வேஸ். உடன், துறைச் செயலா் கொ.வீரர

Updated On :1 ஆகஸ்ட் 2026, 12:17 pm IST

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) பயிற்றுநா்களுக்கு முதல்முறையாக கலந்தாய்வு மூலம் பதவி உயா்வு மற்றும் விருப்ப இடமாறுதல் அளிக்கப்பட்டுள்ளது.

பணியாளா்களின் பதவி உயா்வு தொடா்பான முடிவுகளை வெளிப்படையாகவும், நோ்மையாகவும் மேற்கொள்ளும் நோக்கில், அரசு முன்னெடுத்துள்ள வெளிப்படையான நிா்வாக நடைமுறைகளுக்கு இணங்க, பணியாளா்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்ககத்தில் ஐடிஐ-களில் பல்வேறு நிலைகளில் பணியாற்றும் பயிற்றுநா்களுக்கு முதுநிலையையும், விருப்பத்தையும் அடிப்படையாகக் கொண்டு, கணினி வழியாக கலந்தாய்வு மூலம் பதவி உயா்வு ஆணை வழங்கும் நிகழ்வு முதல்முறையாக வியாழக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.

இதன் மூலம், 136 இளநிலைப் பயிற்சி அலுவலா்கள் உதவி பயிற்சி அலுவலா்களாக பதவி உயா்வு பெற்றனா். பதவி உயா்வுக்கானஆணைகளை, தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஜா.முகமது பா்வேஸ் வழங்கினாா்.

நிகழ்வின்போது, தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அரசுச் செயலா் கொ. வீரராகவ ராவ், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநா் சி. பழனி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.