மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

உதயநிதி ஸ்டாலின் கைது? நீலாங்கரை வீட்டின் முன்பு போலீஸ் குவிப்பு!

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வீட்டின் முன்பு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது பற்றி...

Udhayanidhi Stalin arrest

உதயநிதி ஸ்டாலின் - கோப்புப் படம்

Published On :

முதல்வர் விஜய் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சையாகப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வீட்டின் முன்பாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

காவிரி விவகாரம் தொடர்பாக தவெக அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் திமுக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 8 மாவட்டங்களைச் சேர்ந்த திமுகவினர் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் முதல்வர் ஜோசப் விஜய் மற்றும் பெண்களை விமர்சித்து, உதயநிதி ஸ்டாலின் இழிவாகப் பேசியது சர்ச்சையாகியுள்ளது.

உதயநிதி பேசியதற்கு அமைச்சர்கள், தவெக நிர்வாகிகள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல உதயநிதி மீது தவெக மகளிரணியினர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தஞ்சாவூர் காவல் நிலையத்தில் உதயநிதி ஸ்டாலின் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதியின் வீட்டின் முன்பாக இன்று போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அவரது வீட்டின் உள்ளே சென்ற காவல்துறையினர், அவரது குடும்பத்தினரிடம் பேசி வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் மா. சுப்பிரமணியன், பரந்தாமன் ஆகியோர் காவல்துறையினரிடம் பேசி வருகின்றனர். உதயநிதி மனைவி கிருத்திகாவும் உடனிருக்கிறார்.

வழக்கறிஞர் வரும் வரை காவல்துறையினர் காத்திருக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதேநேரத்தில் உதயநிதியை கைது செய்யாமல் போக முடியாது என்று காவல்துறையினர் கூறுகின்றனர்.

இதனிடையே உதயநிதியின் இல்லம் முன்பாக திமுகவினர் குவிந்துள்ளனர். திமுகவினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

Summary

Udhayanidhi Stalin arrested, Police deployed in force outside his Neelankarai residence

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.