தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்- நாளை வேளாண் பட்ஜெட் 2029-இல் 5 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்: நிா்மலா சீதாராமன் எண்ம கைது மோசடிகளைத் தடுக்க தேசிய அளவில் நடவடிக்கைகள்- உச்சநீதிமன்றம் உத்தரவு இந்திய கொடி கட்டப்பட்ட கப்பல் மீது செங்கடலில் தாக்குதல்: 13 இந்திய மாலுமிகள் மீட்பு புதுச்சேரியில் 2 ரயில்கள் சேவை 7 நாள்களுக்கு ரத்து
/

"மருத்துவக் கலந்தாய்வு நடைமுறையில் மாற்றமில்லை'

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாநிலக் கலந்தாய்வு நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லை என்றும், மத்திய அரசு முன்மொழிந்துள்ள திருத்தங்களை ஏற்கெனவே தமிழகம் பின்பற்றி வருவதாகவும் மாநில மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக் குழு தெரிவித்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :5 ஆகஸ்ட் 2026, 5:45 am IST

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாநிலக் கலந்தாய்வு நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லை என்றும், மத்திய அரசு முன்மொழிந்துள்ள திருத்தங்களை ஏற்கெனவே தமிழகம் பின்பற்றி வருவதாகவும் மாநில மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக் குழு தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் மருத்துவக் கலந்தாய்வுக் குழு (எம்சிசி), அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு விதிகளில் சில மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டின் மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான விதிகளிலும் திருத்தங்கள் செய்யப்படுமா என்ற சந்தேகம் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் எழுந்துள்ளது.

அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் மாணவர் சேர்க்கைக் குழு வெளியிட்ட அறிவிப்பு:

சான்றிதழ் சரிபார்ப்பு நடைமுறையைப் பொருத்தவரை தமிழ்நாட்டில் வழக்கம் போலவே ஒருங்கிணைந்த இணையவழி நடைமுறை தொடர்ந்து செயல்படுத்தப்படும். கலந்தாய்வுக்குப் பிறகு, சம்பந்தப்பட்ட மாணவர்கள் கல்லூரிகளில் சேரும்போது மட்டுமே அசல் சான்றிதழ்கள் நேரடியாக சரிபார்க்கப்படும்.

கலந்தாய்வு மூலம் ஒதுக்கீடு பெற்ற மருத்துவ இடங்களில் சேர விரும்பாத மாணவர்கள், அதற்கான நிராகரிப்பு விண்ணப்பங்களை இணையவழியில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

மாணவர் சேர்க்கைக் குழுவின் அதிகாரபூர்வ இணையதளமான www.tnmedicalselection.org வாயிலாகவே அந்த இடத்தைத் திருப்பி வழங்க விண்ணப்பிக்க வேண்டும்.

முதல்சுற்றில் பங்கேற்ற மாணவர்கள், அடுத்தடுத்த சுற்றுகளில் இடங்களை மாற்றிக் கொள்ளும் முறை (அப்கிரேடேஷன்) வழக்கம்போல தொடரும்.

அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு, சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர் (என்ஆர்ஐ) ஒதுக்கீட்டு இடங்கள் அனைத்தும், ஏற்கெனவே உள்ள நடைமுறைப்படி நிரப்பப்படும்.

மருத்துவக் கலந்தாய்வு குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் மாணவர் சேர்க்கைக் குழு இணையதளப் பக்கத்தில் வெளியிடப்படும். சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளையும், தவறான தகவல்களையும் நம்ப வேண்டாம் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.