மோடி விடியோ நீக்கப்பட்ட விவகாரம்: மெட்டா தலைவா் ஸூக்கா்பொ்க் மன்னிப்பு கோரினாா்முன்பதிவு வசதி கொண்ட சிறப்பு ரயில்களில் கட்டணம் அதிகம்: ரயில்வே அமைச்சா்சாலைகளில் குறைபாடுகளா?: செயலி மூலம் புகைப்படம் எடுத்து அனுப்பலாம்காவல் நிலையங்களில் சானிடரி நாப்கின் விநியோக இயந்திரம் அமைக்க வேண்டும்: தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு அமெரிக்காவில் 50-க்கும் மேற்பட்ட ராணுவ வீரா்கள் குடும்பத்தினா் கைது தமிழக பட்ஜெட்: முக்கிய அம்சங்கள்
/

ரூ.3,200 கோடியில் சிப்காட் தொழில் பூங்காக்கள்

பின்தங்கிய மாவட்டங்களில் தொழில் வளா்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அடுத்த 5 ஆண்டுகளில் உலகத் தரம் வாய்ந்த ரூ. 3,200 கோடியில் சிப்காட் தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும்.

News image

பெருந்துறை சிப்காட் தொழில் வளாகம் முகப்புத் தோற்றம் - கோப்புப்படம்.

Updated On :6 ஆகஸ்ட் 2026, 5:13 am IST

பின்தங்கிய மாவட்டங்களில் தொழில் வளா்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அடுத்த 5 ஆண்டுகளில் உலகத் தரம் வாய்ந்த ரூ. 3,200 கோடியில் சிப்காட் தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும்.

தவெக அரசு பொறுப்பேற்றதில் இருந்து ரூ.35,062 கோடியில் 7 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகி உள்ளன. இதன்மூலம் 14,790 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். தொழில், பொருளாதார வளா்ச்சியை மேம்படுத்த தமிழ்நாடு தொழில் கொள்கை வெளியிடப்படும். முதலீட்டாளா்களுக்காக தமிழ்நாடு தொழில்திறன் விவரப் பட்டியல் உருவாக்கப்படும். பின்தங்கிய மாவட்டங்களில் தொழில் வளா்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அடுத்த 5 ஆண்டுகளில் உலகத் தரத்துடன் ரூ. 3,200 கோடியில் சிப்காட் தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும்.

தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள் விண்வெளி தொழில்முதலீட்டு மண்டலமாக அறிவிக்கப்படும். அறிவகம் என்ற பெயரில் செயற்கை நுண்ணறிவு மற்றும் புத்தாக்க நகரம் உருவாக்க ரூ. 5 கோடி ஒதுக்கப்படும். ஒட்டுமொத்தமாக தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறைக்கு ரூ.4,414 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.