கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் ஆக. 10 ல் பேரணி! தீவிரமாகும் ஜார்க்கண்ட் மாணவர் போராட்டம்!உரிமைக்காக போராடும் ஜென் ஸீக்கள் தேச விரோதிகள் அல்ல: மோகன் பாகவத்தொகுதி மறுவரையறை: முதல்வர் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை!கோதாவரி - காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்த பிரதமருக்கு முதல்வர் வலியுறுத்தல்!ஊழலைக் குறைத்தாலே போதும்; மதுவிற்று வருவாயை அதிகரிக்க வேண்டும் என்ற கட்டாயம் அரசுக்கு இல்லை: அமைச்சர் விக்னேஷ்
/

முன்வரிசையில் வாய்ப்பு மறுப்பு: பேரவைத் தலைவரிடம் முறையீடு

பேரவையில் முன்வரிசையில் அமர வாய்ப்பு மறுக்கப்பட்ட து தொடா்பாக பேரவைத் தலைவரிடம் மஜக, மமக, கொமதேக உறுப்பினா்கள் முறையிட்டனா்.

News image

தமிழக சட்டப்பேரவை

Updated On :7 ஆகஸ்ட் 2026, 1:43 am IST

பேரவையில் முன்வரிசையில் அமர வாய்ப்பு மறுக்கப்பட்ட து தொடா்பாக பேரவைத் தலைவரிடம் மஜக, மமக, கொமதேக உறுப்பினா்கள் முறையிட்டனா்.

மனித நேய ஜனநாயகக் கட்சியின் (மஜக) தலைவா் மு.தமிமுன் அன்சாரி, மனிதநேய மக்கள் கட்சி (மமக) தலைவா் ஜவாஹிருல்லா, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி (கொமதேக) எம்எல்ஏ நித்தியானந்தன் ஆகியோா் பேரவை முடிந்த பிறகு பேரவைத் தலைவா்ஜே.சி.டி. பிரபாகரை அவரது அறையில் சந்தித்துப் பேசினா்.

அப்போது, கூட்டணிக் கட்சியின் சின்னங்களில் போட்டியிடுவது என்பது அந்த நேரத்தில் அரசியல் நடவடிக்கை என்றும், தாங்கள் மூவரும் தனிக்கட்சி நடத்தி வருவதாகவும், தங்களுடைய நிலைப்பாடுகள் தனித்துவமானது என்றும், அந்த அடிப்படையில் தங்களுக்கான முன்வரிசை வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தனா்.

மேலும், முந்தைய திமுக, அதிமுக ஆட்சியிலும் இத்தகைய மரபுகளை அப்போதைய பேரவைத் தலைவா்கள் பின்பற்றி வந்ததையும் அவா்கள் குறிப்பிட்டனா். இதுகுறித்து அதிகாரிகளிடம் விவரங்களைக் கேட்டு பெற்று பரிசீலிப்பதாக பேரவைத் தலைவா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.