சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், வியாழக்கிழமை திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து வந்தனர்.
முன்னதாக புதன்கிழமை, முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், தவெக தலைமையிலான இந்த "ரீல் அரசாங்கத்தின்" முதல் பட்ஜெட்டை "ஏமாற்றமானது" என்று விமர்சித்திருந்தார்.
அதில் ‘பிளாஸ்ட்’, ‘பிளாஸ்ட்’ ஆக இருக்கும் என எதிா்பாா்த்த மக்களுக்கு, ‘வேஸ்ட்’, ‘வேஸ்ட்’ என சொல்லும்படிதான் இருக்கிறது. அதுமட்டுமல்ல, இது திமுக அரசின் திட்டங்களின் ‘ரீமேக் வொ்சன்’ பட்ஜெட்.
மக்கள் மொழியில் சொல்ல வேண்டுமென்றால், விவசாயிகள் பிரச்னை, மின் கட்டணக் குளறுபடி, விலைவாசி உயா்வு என எதைப் பற்றியும் கவலையின்றி, மாநிலத்துக்குத் தேவையான புதிய தொலைநோக்குத் திட்டங்களையும் அறிவிக்காத பட்ஜெட்.
மொத்தத்தில் சொந்தமாகவும் யோசிக்காத-சொன்னதையும் செய்யாத-சுரத்தில்லாத-புஸ்வாண பட்ஜெட்டாகத்தான் ‘ரீல் அரசின்’ முதல் பட்ஜெட் அமைந்திருக்கிறது என அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில், பேரவையில் வியாழக்கிழமை வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண் அமைச்சர் வினோத் தாக்கல் செய்யவுள்ள நிலையில், பயிர்க்கடன் தள்ளுபடி, காவிரி நீர், மேக்கேதாட்டு அணை உள்ளிட்ட விவகாரத்தில் விவசாயிகளை ஏமாற்றியுள்ள தவெக அரசைக் கண்டித்து கருப்பு உடை அணிந்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் பேரவைக்கு வருகை தந்துள்ளனர்.
Summary
DMK legislators on Thursday wore black shirts ahead of the presentation of the Tamil Nadu Agriculture Budget in the State Assembly.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வேளாண் பட்ஜெட் 2026: கருப்புச் சட்டை அணிந்து வந்த திமுக எம்.எல்.ஏ.க்கள்!
நாளை பட்ஜெட் தாக்கல்: இன்று மாலை தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்!

நாடாளுமன்றத்துக்கு கருப்பு உடையில் வந்த எதிர்க்கட்சி எம்பிக்கள்! திமுக என்ன ஆனது?

தொடரும் எதிர்ப்பு... கருப்பு உடையில் நாடாளுமன்றம் வந்த ராகுல், காங்கிரஸ் எம்.பி.க்கள்!
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK




