தவெக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான விஜய் அவரது மனைவி சங்கீதா தாக்கல் செய்த விவகாரத்து வழக்கு செங்கப்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மீண்டும் வெள்ளிக்கிழமை(ஆக.7) விசாரணைக்கு வருகிறது. இன்று விசாரணைக்கு இருவரும் நேரில் ஆஜராவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
விஜய் மற்றும் லண்டன் தொழிலதிபர் மகளான சங்கீதாவுக்கு கடந்த 1999 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஜேசன் சஞ்சய், திவ்யா சாஷா என இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஜேசன் சஞ்சய் தற்போது சிக்மா திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இந்த நிலையில், விஜய்-சங்கீதா இடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக, பிரிந்து வாழ்ந்து வந்ததாகக் கூறப்பட்ட நிலையில், விஜய் பிரபல நடிகை ஒருவருடன் தொடர்பில் இருப்பதால், அவரிடமிருந்து விவாகரத்தும், நிரந்த ஜீவனாம்சம் மற்றும் நீலாங்கரையில் உள்ள வீட்டில் வசிப்பதற்கான உரிமையும் வேண்டும் என்று கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் சங்கீதா மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு 2026 பிப்ரவரி 26 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை செங்கல்பட்டு முதலாவது குடும்பநல நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு ஏப் 20 ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. அன்று விஜய் மற்றும் சங்கீதா இருவரும் நேரில் ஆஜராகவில்லை. அவர்களது வழக்குரைஞர்கள் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இதையடுத்து இருவரையும் ஆஜராக உத்தரவிட்டு வழக்கு விசாரணை மே 19 ஆம் தேதிக்கு விசாரணைக்கு வந்த நிலையில், ஜூன் 15 ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. அன்று இருவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவார்கள் என்று எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், இருவரும் ஆஜராகாத நிலையில், இருவரும் பொதுவெளியில் பிரபலமானவர்கள் என்பதால், பாதுகாப்பு மற்றும் நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொண்டு காணொளி காட்சி மூலம் விசாரணைக்கு ஆஜராக அனுமதி வழங்க வேண்டும் என இருதரப்பு வழக்குரைஞர்களும் கோரிக்கை வைத்தனர். அப்போது. சங்கீதா தரப்பு வழக்குரைஞரிடம் நீங்கள் ஏன் வக்காலத்து தாக்கல் செய்யவில்லை என கேள்வி எழுப்பினார். பின்னர் வழக்கில் தொடர்புடைய விஜய்-சங்கீதா இருவரையும் சமரச மையத்துக்குதான் அனுப்ப வேண்டும் என்று வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில், முதல்வர் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மீண்டும் வெள்ளிக்கிழமை(ஆக.7) விசாரணைக்கு வருகிறது.
இருவரும் காணொளி காட்சி வாயிலாக ஆஜராகி விளக்கம் அளிக்க இருப்பதாக கூறப்படுகிறது. காணொளி காட்சி வாயிலாக விளக்கம் அளிப்பதற்கான இணையதள முகவரி சமர்பிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு இன்று விசாரணைக்கு வரும் நிலையில், சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறுவதால் முதல்வர் விஜய் நேரில் ஆஜராகமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம், சங்கீதா நீதிமன்றத்தில் ஆஜாராவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்த வழக்கு இதுவரை மூன்று முறை விசாரணைக்கு வந்த நிலையில், விஜய்-சங்கீதா இருவரும் நேரில் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், விஜய் - திரிஷா விவகாரம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பேசியது இன்னும் பேசுபொருளாகவே உள்ள நிலையில், மறுபுறம் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு குறித்து சமூக வலைத்தளங்களில் வைரலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
Summary
Divorce case of Vijay and Sangeetha to be heard at Chengalpattu Court today: Will Vijay appear in person?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

‘நீதி வேண்டும்’ என பதாகை பிடித்த முதல்வர் விஜய் என்ன நீதி வைத்துள்ளார்? இபிஎஸ் கேள்வி!

விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!

முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு இன்று விசாரணை
முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: ஜூன் 15-ல் விசாரணைக்கு வருகிறது
விடியோக்கள்
Ravindran Duraisamy interview | விஜய் நினைத்தது நடக்கவில்லை | CM Vijay | TVK | Udhayanidhi Stalin



