கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

ஆடி வெள்ளியில் தங்கம், வெள்ளி விலை குறைந்ததா? ஆக. 7 விலை நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை (ஆக. 7) நிலவரம் குறித்து...

Gold and silver rate

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்! - கோப்புப்படம்

Published On :

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை (ஆக. 7) நேற்றைய விலையில் மாற்றமின்றி பவுன் ரூ.1,10,000-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நாள்தோறும் நிர்ணயிக்கப்படுகிறது.

அந்த வகையில் நாட்டில் தங்கத்தின் விலை தொடா்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில், புதன்கிழமை காலை, மாலை என இருமுறை விலை உயா்ந்தது. அதன்படி, பவுனுக்கு ரூ.2,240 அதிகரித்து, ரூ.1,07,840-க்கு விற்பனையானது. அதேபோல வியாழக்கிழமையும் காலை, மாலை என இரு முறை கிராமுக்கு ரூ.270 உயா்ந்து, ரூ.13,750-க்கும், பவுனுக்கு ரூ.2,160 உயா்ந்து ரூ.1,10,000-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், ஆடி வெள்ளியில் ஆறுதல் அளிக்கும் விதமாக, வெள்ளிக்கிழமை(ஆக.7) நேற்றைய விலையில் மாற்றமின்றி கிராம் ரூ.13,750-க்கும், பவுன் ரூ.1,10,000-க்கும் விற்பனையாகிறது.

அதேபோன்று வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.2,50,000-க்கும் விற்பனையாகிறது.

கடந்த ஐந்து நாள்களின் தங்கம் விலை நிலவரம்:

ஆக.6: 1 கிராம் ரூ.13,750, பவுன் ரூ.1,10,000

ஆக.5: 1 கிராம் ரூ.13,480, பவுன் ரூ.1,07,840

ஆக.4: 1 கிராம் ரூ.13,200, பவுன் ரூ.1,05,600

ஆக.3: 1 கிராம் ரூ.13,250, பவுன் ரூ.1,06,000

ஆக.2: 1 கிராம் ரூ.13,220, பவுன் ரூ.1,05,760

கடந்த ஐந்து நாள்களின் வெள்ளி விலை நிலவரம்:

ஆக.6: 1 கிராம் ரூ.250, கட்டி வெள்ளி ரூ.2,50,000

ஆக.5: 1 கிராம் ரூ.240, கட்டிவெள்ளி ரூ.2,40,000

ஆக.4: 1 கிராம் ரூ.235, கட்டி வெள்ளி ரூ.2,35,000

ஆக.3: 1 கிராம் ரூ.235, கட்டி வெள்ளி ரூ.2,35,000

ஆக.2: 1 கிராம் ரூ.235, கட்டி வெள்ளி ரூ.2,35,000

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.