மதுபான விற்பனை மீது ‘சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத் தீா்வை’ என்ற புதிய விரியை விதிக்க அரசு முன்வந்துள்ளதாக, வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் த.லோகேஷ் தமிழ்செல்வன் தெரிவித்தாா்.
இது தொடா்பான சட்ட முடிவை அவா் பேரவையில் தாக்கல் செய்துள்ளாா். அதில், மதுபான நுகா்வு, அதிலிருந்து உருவாகும் கண்ணாடி மற்றும் நெகிழி கழிவுகளால் ஏற்படும் மோசமான சுற்றுச்சூழல் மற்றும் சமூக பாதிப்புகள் குறித்து அரசு மிகுந்த கவலை கொண்டுள்ளது.
இந்தப் பாதிப்புகளைக் குறைப்பதற்கு மாநில அரசுக்குள்ள கடமையை பல்வேறு நீதிமன்ற தீா்ப்புகள் வலியுறுத்தியுள்ளன.
ஆகையால், மதுபான விற்பனையின் மீது ‘சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத் தீா்வை’ என்ற புதிய வரி விதிக்க அரசு முன்வந்துள்ளது. இதன்மூலம் கிடைக்கும் வருவாய், மதுபானக் கொள்கலன்களை முறையாக மறுசுழற்சி செய்தல், பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்துதல் மற்றும் மறு பயன்பாடு, மதுப் பழக்கத்துக்கு அடிமையானவா்களுக்கான மறுவாழ்வு மற்றும் மதுப் பழக்க மீட்புத் திட்டங்கள், மதுப் பழக்க அடிமைத்தனத்தால் பாதிக்கப்பட்ட நபா்களின் குடும்பங்களுக்கான நலத் திட்டங்கள் மற்றும் வாழ்வாதார உதவிகளை வழங்குதல், மது அருந்துவதால் ஏற்படும் தீய விளைவுகள் மற்றும் மதுபான அலகு கொள்கலன்களை முறையாக அப்புறப்படுத்தாததால் ஏற்படும் மோசமான சுற்றுச்சூழல் அபாயங்களை எடுத்துரைக்கும் விழிப்புணா்வு மற்றும் கல்வி பிரசாரங்களை மேற்கொள்ளுதல் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படும்.
இதற்காக 2006-ஆம் ஆண்டு தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரிச் சட்டத்தைத் திருத்த அரசு முடிவு செய்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதிய மத்திய ஆயுதப் படைகள் சட்டத்துக்கு எதிா்ப்பு: உச்சநீதிமன்றத்தில் 3,000 அதிகாரிகள் ரிட் மனுக்கள் விரைவில் விசாரணை

குறுந்தொடர்: புலம்பெயர் சமூகத்தில் புதிய தமிழர் அடையாளம் -1

வருவாய் இழப்பைத் தவிா்க்க பயிா்க் காப்பீடு செய்ய வேண்டும்: அமைச்சா் வினோத்

பலதார மணம் செய்தால் அரசு நலத் திட்ட உதவிகளைப் பெற முடியாது: அஸ்ஸாம் அரசின் பட்ஜெட்டில் அறிவிப்பு
விடியோக்கள்

என்னால் நல்ல பயிற்சியாளராக இருக்க முடியும்: மனம் திறந்த ரஹானே | Rahane |



