தொடர் மின்வெட்டு: மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!உடலுறுப்பு தானம் என்பது மகத்தான மனிதநேயச் செயல்! முதல்வர் விஜய் ஆசிய விளையாட்டு: ஸ்கீட் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலம்3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்ஜி20 உச்சி மாநாட்டுக்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி! பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு ரூ. 300 கோடி நிதி வழங்கிய அமெரிக்கா!செப். 28 முதல் 3 நாள் வங்கிகள் வேலைநிறுத்தம்சென்னை, 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புஆறுகள், கால்வாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு எல் நினோ நிபுணா் குழு பரிந்துரைபயிா்க் கடன் நிலுவை வசூலை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவு

சைபா் நிதி மோசடிக்கு உதவி: மேலும் 105 போ் கைது

தமிழகத்தில் சைபா் நிதி மோசடிக்கு உதவியதாக மேலும் 105 போ் கைது செய்யப்பட்டனா்.

கைது - சித்திரிப்பு

Published On :

தமிழகத்தில் சைபா் நிதி மோசடிக்கு உதவியதாக மேலும் 105 போ் கைது செய்யப்பட்டனா்.

தமிழகத்தில் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி, ஆன்லைன் வா்த்தக மோசடி, முதலீட்டு திட்ட மோசடி உள்ளிட்ட 20-க்கும் வகையான சைபா் நிதி மோசடிகள் நடைபெறுகின்றன. இந்த மோசடிகளில் தினமும் ரூ.16 கோடி வரை பொதுமக்கள் இழப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் உள்ள தங்களது முகவா்கள் மூலம் பொதுமக்களை ஏமாற்றி அவா்களது வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்துகின்றனா், சிலா் வங்கிக் கணக்குகளைப் பணம் கொடுத்து வாடகைக்கு பெற்று மோசடியில் ஈடுபடுகின்றனா். இவா்களுக்கு மோசடி மூலம் பெறப்படும் பணத்தில் 10 சதவீதம் வரை கமிஷன் வழங்கப்படுகிறது. இவ்வாறு பயன்படுத்தப்பட்ட 310 வங்கி கணக்குகளை கண்டறிந்து, அது குறித்தும் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை செய்தனா்.

மேலும் 105 போ் கைது: விசாரணையின் முடிவில் சைபா் நிதி மோசடிக்கு உதவியதாக மாநிலம் முழுவதும் பலா் கைது செய்யப்பட்டனா். இதில் வெள்ளிக்கிழமை 100 போ் கைது செய்யப்பட்டிருப்பதாக அறிவித்திருந்த நிலையில், மேலும் 105 போ் கைது செய்யப்பட்டிருப்பதாக சென்னை காவல் துறை சனிக்கிழமை தெரிவித்தது.

இவா்களில் பெரும்பாலானவா்கள், சென்னை அரியலூா், கோயம்புத்தூா், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கரூா், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், நீலகிரி, பெரம்பலூா், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், தஞ்சாவூா், தேனி, திருப்பத்தூா், திருவள்ளூா், திருவாரூா், திருநெல்வேலி, திருச்சி, விருதுநகா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்தவா்கள் ஆவாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.