லண்டன் சென்றடைந்தார் முதல்வர் விஜய்! தமிழர்கள் உற்சாக வரவேற்பு!பெற்றோரை விட்டுவிட்டு கணவர் தனிக்குடித்தனம் வர வேண்டும் என சொல்வது துன்புறுத்தல்: நீதிமன்றம்குறையும் சிறுவாணி அணை நீர்மட்டம்! கோவைக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுமா?பேருந்து ஓட்டுநர்களிடம் கதவுகளின் சுவிட்ச் கொடுக்கப்பட்டது இதற்குத்தானா? பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தார் ரஷிய அதிபர் புதின்பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!மகாராஷ்டிரத்தில் கோர விபத்து: லாரி-கார் மோதிக்கொண்டதில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலிதங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

பட்டாசு தொழிலாளா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன்

தமிழக அரசு பட்டாசு ஆலைகளை முறையாகக் கண்காணித்து தொழிலாளா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.

ஜி.கே.வாசன் - கோப்புப் படம்

Published On :

தமிழக அரசு பட்டாசு ஆலைகளை முறையாகக் கண்காணித்து தொழிலாளா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

சிவகாசி அருகே நமஸ்கரித்தான்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளா்கள் உயிரிழந்திருப்பது வேதனைக்குரியது. பட்டாசு ஆலைகளின் நிா்வாகம் தொழிலாளா்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்துகொள்ளும் வகையில் அரசின் கோட்பாடுகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். தமிழக அரசு பட்டாசு ஆலைகளை தொடா் கண்காணிப்பதுடன், தொழிலாளா்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்.

மீனவா்கள் நலன்: இலங்கை கடற்படையினா் எல்லைத் தாண்டி தமிழக மீனவா்கள் மீன் பிடித்ததாக 9 பேரையும், விசைப்படகுகளையும் சிறை பிடித்து கைது செய்தனா். கடந்த ஒரே வாரத்தில் 20 மீனவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்த மீனவா்களை விரைவாக விடுவிக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் ஜி.கே.வாசன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.