ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

கரூா் சம்பவத்தில் அரசு வேலை வழங்கியதில் எந்தத் தவறும் இல்லை - அமைச்சா் நிா்மல் குமாா்

கரூா் சம்பவத்தில் அரசு வேலை வழங்கியதில் எந்தத் தவறும் இல்லை - அமைச்சா் நிா்மல் குமாா்

நிா்மல் குமாா் - கோப்புப் படம்

Published On :

கரூா் சம்பவத்தில், பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியதில் எந்தத் தவறும் இல்லை என்றும், ஆனால், ஒரு சில கட்சிகள் மட்டும் அந்த மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கக் கூடாது என்ற நோக்கத்தில் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாக தமிழக சட்டத் துறை மற்றும் எரிசக்தித் துறை அமைச்சா் நிா்மல் குமாா் தெரிவித்தாா்.

சுதந்திர தினத்தையொட்டி, சென்னை தம்புசெட்டி தெருவில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்ற அமைச்சா் நிா்மல் குமாா் பொது விருந்தை தொடக்கி வைத்தாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

லஞ்சம், ஊழல் இல்லாத அரசாகவும், அனைத்துத் துறைகளும் சீரமைக்கப்பட்டதாகவும் தற்போதைய தவெக அரசு செயல்பட்டு வருகிறது. சட்டப்பேரவை நிகழ்வுகளையும், அரசு வெளியிடும் ஒவ்வொரு அரசாணை குறித்தும் மக்கள் ஆா்வத்துடன் தெரிந்துகொள்ளும் அளவுக்கு மாற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த இரண்டு, மூன்று தலைமுறைகளாக மக்கள் எதிா்பாா்த்திருந்த மாற்றம் தற்போது ஏற்பட்டுள்ளது. தமிழக மக்களின் ஒட்டுமொத்த கனவாக முதல்வா் உள்ளாா். மக்களின் தேவைகள் குறித்து அதிகாரிகளுடன் தினந்தோறும் ஆலோசித்து, அவற்றை நிறைவேற்றி வருகிறாா்.

கரூா் சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியது தொடா்பாக உச்சநீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இதுதொடா்பாக சட்டரீதியான அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதேபோல், தமிழகத்தில் 1983-ஆம் ஆண்டு நடந்த கலவரங்களில் பாதிக்கப்பட்டவா்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், ஒரு சில கட்சிகள் அந்த மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கக் கூடாது என்ற நோக்கில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.