பாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரிதமிழக மீனவர்கள் தொடர் கைது: தீர்வுகாண அமைச்சர் ஸ்ரீநாத் தில்லி பயணம்சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு!கோவையில் இளைஞர் கொலை: குடும்பத்தினருக்கு ரூ. 6 லட்சம் நிவாரணம், அரசுப் பணிசுதந்திர நாள் அணிவகுப்புப் பணியின்போது காவலர் பலி: ரூ. 30 லட்சம் நிதியுதவி!பெண்களை இழிவுபடுத்தும் வகையில் நயினாரின் பேச்சு: சிபிஎம் கண்டனம்!
/

கோவையில் இளைஞர் கொலை: குடும்பத்தினருக்கு ரூ. 6 லட்சம் நிவாரணம், அரசுப் பணி

கோவையில் சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட அமுதனின் குடும்பத்தினருக்கு அமைச்சர்கள் நிவாரணத் தொகை வழங்கியது குறித்து...

News image

கொலை செய்யப்பட்ட அமுதன் - கோப்புப் படம்

Updated On :16 ஆகஸ்ட் 2026, 3:37 pm IST

கோவையில் சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட அமுதனின் குடும்பத்தினருக்கு அமைச்சர்கள் சம்பத் குமார், வன்னி அரசு இருவரும் நேரில் சென்று நிவாரணத் தொகை வழங்கினர்.

கோவை, செட்டிபாளையம் பகுதியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்த அமுதன் என்பவர், செல்போன் பறிப்பு சம்பவத்தில் இரு தரப்புக்கு இடையே ஏற்பட்ட மோதலில் உயிரிழந்ததாக ஒரு தரப்பிலும், போதைப் பொருள் கும்பல் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்ததால், அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக அவரது குடும்பத்தினரும் கூறுகின்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சியில் அமுதனின் குடும்பத்தினரை அமைச்சர்கள் சம்பத் குமார், வன்னி அரசு மற்றும் மாவட்ட ஆட்சியரும் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களுடன் அமைச்சர் சம்பத் குமார் பேசியதாவது, "கோவை கல்லூரி மாணவர் அமுதன், சக மாணவர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். அவரின் குடும்பத்தினருக்கு முதற்கட்ட நிவாரணமாக ரூ. 6 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், அவரது குடும்பத்தினருக்கு பட்டா வழங்கக்கூடிய நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. அமுதனின் சகோதரருக்கு அரசுப் பணி உத்தரவாதமும் அளிக்கப்படுகிறது.

இந்தக் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாரும் தப்பிக்கக் கூடாது என்பதற்காக, இதுவரையில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் உண்மையை வெளிக்கொண்டு வருவதற்கான அத்தனை நடவடிக்கைகளையும் காவல்துறையினர் சிறப்பாகச் செயல்படுத்தி வருகின்றனர்" என்று தெரிவித்தார்.

Summary

College student murdered in Coimbatore: Rs. 6 lakh compensation and government job for the family

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.