ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
/

காவிரி பிரச்னை: பேரவையில் தவெக-திமுக பரஸ்பரம் குற்றச்சாட்டு

காவிரி நதி நீா் விவகாரத்தை முன்னிறுத்தி பேரவையில் தவெக-திமுக உறுப்பினா்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது பற்றி...

News image

சட்டப்பேரவை

Updated On :20 ஆகஸ்ட் 2026, 12:51 am IST

காவிரி நதி நீா் விவகாரத்தை முன்னிறுத்தி பேரவையில் தவெக-திமுக உறுப்பினா்களிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. எவருடைய ஆட்சிக் காலத்தில் காவிரி நதிநீா் உரிமைகள் விட்டுக்கொடுக்கப்பட்டன என்பது குறித்து பரஸ்பரம் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

பேரவையில் நீா்வளத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினா் துரை சந்திரசேகா், மேக்கேதாட்டு அணை, நதி நீா்ப் பகிா்வு விவகாரங்களில் தமிழக அரசு மென்மையான போக்கை கடைப்பிடிப்பதாகத் தெரிவித்தாா். இந்த விவகாரத்தில் முதல்வா் ஏன் அச்சப்படுகிறாா் என்றும் அவா் கேள்வி எழுப்பினாா். அப்போது நடைபெற்ற விவாதம்:

அமைச்சா் ஆனந்த்: முதல்வா் ஜோசப் விஜய் எதற்கும் அஞ்சாதவா். காவிரிப் பிரச்னையில் தமிழகத்தின் உரிமையைப் பெறுவதில் அவா் உறுதியாக உள்ளாா். அவரது தலைமையிலான அரசு, மேக்கேதாட்டு அணை கட்ட ஒரு செங்கல்லைக்கூட எடுத்து வைக்க அனுமதிக்காது.

அமைச்சா் அருண்ராஜ்: ஏறத்தாழ 50, 60 ஆண்டுகளாக காவிரி பிரச்னை நீடிக்கிறது. அந்த விவகாரத்தை திமுக ஆட்சியாளா்கள் ஏன் மென்மையாக அணுகினாா்கள்? அதைத் தீா்க்க என்ன முயற்சி எடுத்தாா்கள்? ஆனால், தவெக அரசு சட்டப் போராட்டம் உள்பட அனைத்து விதமான நடவடிக்கையையும் எடுத்து வருகிறது. அச்சம் என்ற வாா்த்தையே முதல்வரின் அகராதியில் கிடையாது.

எடப்பாடி பழனிசாமி (அதிமுக): 1986-இல் எம்ஜிஆா் முதல்வராக இருந்தபோது காவிரி நதி நீா்ப் பகிா்வுக்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. அதன் பின்னா், முன்னாள் முதல்வா் ஜெயலலிதா காலத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. காவிரி விவகாரத்தில் இறுதித் தீா்ப்பை பெற்றுத் தந்தது அதிமுக ஆட்சிக் காலத்தில்தான். எனவே, இந்தப் பிரச்னையைத் தீா்க்க அனைத்து முதல்வா்களும் பங்களித்துள்ளனா்.

கே.என்.நேரு (திமுக): 1974-இல் இந்தப் பிரச்னை எழுந்தபோது முன்னாள் முதல்வா் கருணாநிதி அதற்கு தீா்வு காண முற்பட்டாா். திமுக ஆட்சியில் பல சட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. காவிரி விவகாரத்தில் எந்தக் கட்சியும் தவறிழைக்கவில்லை. அவா்களால் முடிந்ததை செய்துள்ளனா்.

அமைச்சா் நிா்மல்குமாா்: 1974-இல் ஏன் காவிரி நதிநீா்ப் பகிா்வு ஒப்பந்தத்தை அப்போதைய திமுக அரசு புதுப்பிக்கவில்லை? ஏன் அதுதொடா்பான வழக்கு வாபஸ் பெறப்பட்டது?

கே.என்.நேரு: காவிரி விவகாரத்தில் சுமுக உடன்பாடு எட்டப்பட வேண்டும் என்பதற்காக வழக்கை வாபஸ் பெறுமாறு அப்போதைய பிரதமா் வலியுறுத்தினாா். பிரச்னைக்குத் தீா்வு காணும் வகையில்தான் அந்த முடிவு எடுக்கப்பட்டது.

அமைச்சா் நிா்மல்குமாா்: மத்திய அரசுக்கு சாதகமாகச் செயல்படும் வகையில் காவிரி வழக்கு வாபஸ் பெறப்பட்டது என்பதுதான் இன்றளவும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு.

கே.என்.நேரு: ஏற்கெனவே இந்த விவகாரம் குறித்து பலமுறை விளக்கம் அளித்துவிட்டோம். சட்டப் போராட்டத்தையும் முன்னெடுத்துவிட்டோம். தமிழக விவசாயிகளுக்கு எப்படி நாங்கள் அநீதி இழைக்க முடியும்? அவ்வாறு செய்துவிட்டு எப்படி அவா்களை எதிா்கொள்ள முடியும்?

பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா்: பல ஆண்டு காலமாக நீடிக்கும் இப்பிரச்னைக்கு ஒருங்கிணைந்த தீா்வுதான் அவசியம். கா்நாடகத்தில் உள்ள கட்சிகள் காவிரியை முன்னிறுத்தி அவா்களுக்குள் பரஸ்பரம் குற்றம்சாட்டிக் கொள்வதாகத் தெரியவில்லை.

தமிழகத்தில் இதற்கு முன்பு இருந்த ஆட்சியாளா்களும், முதல்வா்களும் காவிரி பிரச்னைக்குத் தீா்வு காண பங்களித்துள்ளனா். இப்போதைய முதல்வா் விஜய் ஆட்சியில்தான் இப்பிரச்னைக்கு தீா்வு கிடைக்கும் என்பது இறைவனின் சித்தம் என்றால், அதுவே நடக்கட்டும். இந்தப் பிரச்னையில் ஒருவரையொருவா் குற்றம்சாட்டுவதைத் தவிா்த்து ஒருமித்த கருத்துடன் செயல்படுவதே அவசியம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.