முதல்வரை மகிழ்விக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதிகாரத்தில் இருப்பவர்கள் தன்னிச்சையாக செயல்படுவதை நீங்கள் அனுமதிக்கக் கூடாது என்று முதல்வர் விஜய்க்கு அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக இது நம்ம இயக்கத்தின் தலைவரான அண்ணாமலை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “தமிழக முதல்வர் விஜய் அவர்களின் கவனத்திற்கு, திமுக ஆட்சி வீழ்ச்சியடைந்ததற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று, ஆளுங்கட்சியினர் என்ற அதிகார போதையில், மக்களின் விமர்சனங்களையும் எதிர்க்கருத்துகளையும் அலட்சியப்படுத்தியதுதான்.
அதே பாதையில் உங்கள் அரசும் பயணிக்கிறதோ என்ற அச்சம் தற்போது எழுந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும், சமூக வலைதளங்களில் உங்கள் கட்சியினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மற்றும் விமர்சனங்களுக்காக மாற்றுக் கருத்து கொண்ட 25-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
குறிப்பாக, தனது குடும்பத்தை தகாத வார்த்தைகளால் விமர்சித்த தவெக தொண்டருக்கு பதிலளித்த We The Leaders தன்னார்வலர் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்திருப்பது கவலைக்குரியது.
சமூக வலைத்தளங்களில் தனிநபர் அவதூறு மற்றும் வரம்பு மீறிய பேச்சுகளை கண்காணிப்பது அவசியம்தான். ஆனால், ஆட்சியையும் ஆளும் கட்சியையும் விமர்சிக்கும் ஒவ்வொரு குரலையும் வழக்கு, கைது என்ற அதிகாரத்தின் மூலம் அடக்க முயற்சிப்பது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானதல்ல.
முதல்வரை மகிழ்விக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதிகாரத்தில் இருப்பவர்கள் தன்னிச்சையாக செயல்படுவதை நீங்கள் அனுமதிக்கக் கூடாது. நீங்கள் இன்று ஒரு கட்சியின் தலைவர் மட்டுமல்ல; தமிழகத்தின் அனைத்து மக்களுக்கும் பொதுவான முதல்வர்.
எதிர்க்கருத்துகளும் விமர்சனங்களும் ஜனநாயகத்தின் இயல்பான அங்கங்கள். சிறிய விமர்சனங்களுக்குக்கூட வழக்கு, கைது என்ற போக்கு தொடர்வது துரதிருஷ்டவசமானது. இந்தப் போக்கை உடனடியாகத் தடுத்து, ஜனநாயகக் குரல்களுக்கும் விமர்சனங்களுக்கும் உரிய இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
Summary
Annamalai has urged Chief Minister Vijay not to allow those in power to act arbitrarily in their eagerness to please the Chief Minister.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நான் பாஜகவின் பி-டீம் இல்லை: அண்ணாமலை
வீட்டுக்கு வீடு தேசியக் கொடி வைக்க வேண்டும்: அண்ணாமலை

இதைவிட மோசமான மாசு இருக்க முடியுமா? உதயநிதியை விமர்சித்த அண்ணாமலை!

வைகையை மாசுபடுத்தாமல் காப்போம்: மதுரை மக்களுக்கு அண்ணாமலை வேண்டுகோள்!
விடியோக்கள்
Dimagi Naxal: யாரைச் சொல்கிறார் பிரதமர் மோடி? | PM Modi |



