வைகை ஆற்றில் பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளை கொட்டாமல் பாதுகாத்து, நம் குழந்தைகளுக்கும், வருங்கால தலைமுறைக்கும் தூய்மையான வைகையை விட்டுச் செல்வோம் என மதுரை மக்களுக்கு 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்தார்.
'வீ த லீடர்ஸ்' அமைப்பின் சார்பில் திங்கள்கிழமை மதுரையில் வைகை ஆற்றை தூய்மைப்படுத்தும் மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வீ த லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை பங்கேற்று தூய்மை செய்யும் பணியிலும் ஈடுபட்டார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
"சுத்தமான, வளமான தமிழகம்" இயக்கத்தின் கீழ் தூய்மைப் பணியிலும், மரக்கன்றுகள் நடும் நிகழ்விலும் பங்கேற்றதில் பெரும் மகிழ்ச்சி.
இன்றைய தினம் காலை, நமது மதுரையின் அடையாளமாகவும், நம் வாழ்வியலோடும், பண்பாட்டோடும் ஒன்றிணைந்த, புனிதமான வைகை நதிக்கரையில், நமது அமைப்பின் சார்பில் "சுத்தமான, வளமான தமிழகம்" இயக்கத்தின் கீழ் தூய்மைப் பணியிலும், மரக்கன்றுகள் நடும் நிகழ்விலும் பங்கேற்றதில் பெரும் மகிழ்ச்சி.
சமூக அக்கறையே நமது இயக்கத்தின் மிகப்பெரிய பலம்
திங்கள்கிழமை காலை என்றாலும், பெருந்திரளாகக் கூடி, முழு அர்ப்பணிப்புடன் உழைத்த தன்னார்வலர்கள், இளைஞர்கள் மற்றும் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் சமூக அக்கறையே நமது இயக்கத்தின் மிகப்பெரிய பலம்.
மதுரை மாநகரின் உயிர்நாடி
வைகை நதி என்பது வெறும் நதி மட்டும் அல்ல. மதுரை மாநகரின் உயிர்நாடி. பல ஆயிரம் ஆண்டுகளாக இந்த மண்ணின் நாகரிகத்தையும், விவசாயத்தையும், ஆன்மிகப் பாரம்பரியத்தையும் தாங்கி நிற்கும் தாய். வைகை அன்னையைத் தூய்மையாகப் பாதுகாப்பது, நம் ஒவ்வொருவரின் தார்மீகப் பொறுப்பு. ஒரு நதியைப் பாதுகாப்பது என்பது வெறும் சுற்றுச்சூழலைக் காப்பதல்ல, நமது பண்பாடு, வரலாறு, வாழ்வாதாரம் அனைத்தையும் பாதுகாப்பதாகும்.
வருங்கால தலைமுறைக்கும் தூய்மையான வைகை
வைகையை மாசுபடுத்தாமல் காப்போம். பிளாஸ்டிக் மற்றும் கழிவுகளை நதியில் கொட்டாமல் இருப்போம். நம் குழந்தைகளுக்கும், வருங்கால தலைமுறைக்கும் தூய்மையான வைகையை விட்டுச் செல்வோம். "சுத்தமான, வளமான தமிழகம்" என்ற இலக்கை மக்கள் இயக்கமாக மாற்றி, பசுமையும் தூய்மையும் நிறைந்த தமிழ்நாட்டை ஒன்றிணைந்து உருவாக்குவோம் என்ற அன்பான வேண்டுகோளை, மதுரை மக்களுக்கு வைத்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
Summary
Annamalai’s statement about leaving behind a clean Vaigai for our children and future generations...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து!

வீ தி லீடர்ஸ் அமைப்பின் இலக்கை 50% எட்டிவிட்டோம்: அண்ணாமலை

முதல் மாநாடு... மேடையில் விழுந்து வணங்கிய அண்ணாமலை!

பொள்ளாச்சியில் ‘வீ த லீடர்ஸ்’ முதல் மாநாடு! அண்ணாமலை அறிவிப்பு!
விடியோக்கள்

விஜய் அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ? | CM Vijay | TVK Ministers | Jagadeswaran | TVK Government




