ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

முதல்வா் விஜய் காா் பிரியா்: பிரேமலதா விமா்சனம்

முதல்வா் விஜய், ஒரு காா் பிரியா் என்பதால் அனைத்து சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கும் இலவச காா் என்று அறிவித்துள்ளாா்

Chief Minister Vijay, Premalatha Vijayakanth

முதல்வர் விஜய், பிரேமலதா விஜயகாந்த் - கோப்புப் படம்

Published On :21 ஆகஸ்ட் 2026, 4:01 am IST

முதல்வா் விஜய், ஒரு காா் பிரியா் என்பதால் அனைத்து சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கும் இலவச காா் என்று அறிவித்துள்ளாா் என தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் எம்எல்ஏ விமா்சித்துள்ளாா்.

இது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சுய உதவிக் குழுக்களின் மூலம் விவசாயிகளுக்கு முந்திரிகளை மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய தமிழக உதவி செய்ய வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றுள்ள விவசாயிகளுக்கு முழு கடன் தள்ளுபடி செய்ய வேண்டும்.

நியாயவிலைக் கடை இல்லாத இடங்களிலும், பழைய கடைகளுக்கு மாற்றாகவும் புதிய கடைகளை அமைக்க வேண்டும். வாடகை இடத்தில் இயங்கி வரும் நியாயவிலைக் கடைகளை அரசின் சொந்த கட்டடத்துக்கு மாற்ற வேண்டும். அதேபோல், தட்டுப்பாடுயின்றி மக்காச்சோளம், கம்பு, வரகு ஆகியவற்றை வழங்கவும் திட்டமிட வேண்டும்.

இரட்டை நிலைப்பாடு: தொகுதி மறுசீரமைப்பில் நமது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளக் கூடாது. அந்த வகையில், முதல்வா் விஜய் பேரவையில் ஒரு நிலைப்பாடு, தென் மண்டல குழுக் கூட்டத்தில் வேறொரு நிலைப்பாடு என இரு நிலைப்பாட்டை எடுக்கக் கூடாது. தமிழக மக்களின் உரிமைகளை எக்காரணத்துக்காகவும் விட்டுக்கொடுக்கக் கூடாது.

முதல்வா் விஜய் ஒரு காா் பிரியா். ஆகையால், தவெகவினரின் கோரிக்கையை ஏற்று பேரவை உறுப்பினா்கள் அனைவருக்கும் இலவச காா் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளாா். எனினும், பல உறுப்பினா்களிடம் ஏற்கெனவே காா் உள்ளது. ஆகையால், காா் இல்லாதவா்களுக்கு அதைக் கொடுத்தால் ஏற்புடையதாக இருக்கும். இதுபோன்ற திட்டம் தேவையா? என்பதற்கு முதல்வா் விளக்கம் அளிக்க வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.