பெங்களூர் அறிவியல் கல்வி மைய மாணவர் தற்கொலை! 15 நாள்களில் 2வது சம்பவம்எத்தனாலுக்கும் சர்க்கரை விலையேற்றத்துக்கும் தொடர்பில்லை: மத்திய அரசுவண்டலூர் வண்ணத்துப்பூச்சி பூங்கா மீண்டும் திறப்பு!குடும்பத்துடன் இறுதிநாள்கள்.. கொலைக் குற்றவாளிக்கு 105 வயதில் விடுதலை! சூட்கேஸில் சடலம்! குற்றவாளிகள் இருந்த வீட்டில் பிரியாணி டபராவில் மனித உடல்! தூத்துக்குடி - நரசாபூா் இடையே செப். 7 முதல் சிறப்பு ரயில்வார இறுதி விடுமுறை: 2,755 சிறப்பு பேருந்துகள் இயக்கம்ஆக. 25 முதல் இரவு நேர புறநகா் ரயில்கள் ரத்துபொறியியல் கலந்தாய்வு: 3-ஆம் சுற்றில் 68,640 மாணவா்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு அடுத்த 10 மாதங்களில் இந்திய வடிவமைப்பிலான கைப்பேசிகள்: அஸ்வினி வைஷ்ணவ்

திமுக புதிய தீர்மானம்! மாவட்டச் செயலாளர் பதவி இழக்கும் 13 பேர்! யார் யார்?

திமுகவின் மாவட்டச் செயலாளர்கள் பொறுப்பிலிருந்து 13 பேர் விடுவிக்கப்படுவது குறித்து...

Anitha Radhakrishnan | EV Velu | Ragupathy

அனிதா ராதாகிருஷ்ணன் | எ.வ. வேலு | ரகுபதி - கோப்புப் படம்

Published On :22 ஆகஸ்ட் 2026, 3:24 pm IST

திமுக செயற்குழு கூட்டத்தின் வயது உச்ச வரம்பு புதிய தீர்மானத்தால் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் 13 பேர் விடுவிக்கப்படவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தோல்வியடைந்த நிலையில், கட்சியில் சில மறுசீரமைப்பு கொண்டு வருவதற்காக சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று கட்சி செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றா இந்தக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்களும் கொண்டு வரப்பட்டன.

தீர்மானத்தின்படி, திமுகவின் மாவட்டச் செயலாளர்களின் அதிகபட்ச வயது 70 என நிர்ணயிக்கப்படுகிறது. அதேபோல், மாவட்டக் கழகச் செயலாளராகும் ஒருவர் அதிகபட்சமாக 3 முறை மட்டுமே பொறுப்பு வகிக்க முடியும்.

திமுகவில் தற்போது 70 வயதைக் கடந்த மாவட்டச் செயலாளர்களாக திருவண்ணாமலை தெற்கு எ.வ. வேலு (75), தூத்துக்குடி தெற்கு அனிதா ராதாகிருஷ்ணன் (74), புதுக்கோட்டை தெற்கு ரகுபதி (76), விழுப்புரம் வடக்கு செஞ்சி மஸ்தான் (71), விருதுநகர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் (77), ராணிப்பேட்டை ஆர். காந்தி (80), தஞ்சை வடக்கு சாக்கோட்டை அன்பழகன் (72), நெல்லை மேற்கு ஆவுடையப்பன் (81), ஈரோடு தெற்கு முத்துசாமி (77), மதுரை மாநகர் கோ. தளபதி (70), காஞ்சிபுரம் தெற்கு சுந்தர் (72), தேனி தெற்கு ராமகிருஷ்ணன் (77), சேலம் கிழக்கு எஸ். ஆர். சிவலிங்கம் (75) ஆகியோர் பதவி வகித்து வருகின்றனர்.

ஆகையால், திமுக செயற்குழு தீர்மானத்தின்படி இவர்கள் 13 பேரும் மாவட்டச் செயலாளர் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.

மேலும், திமுகவில் புதிதாக உறுப்பினர்கள் சேர்க்கை நடந்த பின்னர், உள்கட்சித் தேர்தல் நடைபெறும் என்று கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.

கட்சியில் இளம் தலைமுறையினருக்கு வாய்ப்புகள் வழங்கிடும் வகையில் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

Summary

13 DMK district secretaries are being relieved of their posts

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.