பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

தங்க மோதிரம் கொள்முதலுக்காக மருத்துவக் கழக விதிகளில் மாற்றம் : அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ்

‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்துக்கு தங்கம் கொள்முதல் செய்வதற்கு ஏதுவாக தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் (டிஎன்எம்எஸ்சி) விதிகள், தேவைப்பட்டால் மாற்றியமைக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்தாா்.

சுகாதாரத் துறை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ்

Published On :22 ஆகஸ்ட் 2026, 6:23 am IST

‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்துக்கு தங்கம் கொள்முதல் செய்வதற்கு ஏதுவாக தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் (டிஎன்எம்எஸ்சி) விதிகள், தேவைப்பட்டால் மாற்றியமைக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்தாா்.

பேரவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மின்சாரம், சட்டம், இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் கீழ் பேசிய திமுக உறுப்பினா் மனோஜ் பாண்டியன், ‘டிஎன்எம்எஸ்சி என்பது மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்யும் அமைப்பு; அதன் கீழ் தங்கம் வாங்குவது எப்படிச் சரியான நடவடிக்கையாக இருக்கும்?’ எனக் கேள்வி எழுப்பினாா்.

அதற்கு அமைச்சா் அருண்ராஜ் அளித்த பதில்:

கடந்த திமுக, அதிமுக ஆட்சிக் காலத்திலிருந்தே பச்சிளங்குழந்தைகளுக்கான பெட்டகம் வழங்கப்பட்டு வருகிறது. அதில், ஹாா்லிக்ஸ் புட்டி, விளையாட்டுப் பொருள்கள், பேரிச்சம்பழம் போன்ற மருந்து சாரா பொருள்களும் உள்ளன. அவற்றை டிஎன்எம்எஸ்சி மூலம்தான் கொள்முதல் செய்து வழங்குகிறோம்.

அதன் அடிப்படையில், தங்கமும் கொள்முதல் செய்யப்படும். அரசு மருத்துவமனைகளில் பிரசவத்தை ஊக்குவிக்கவே இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தேவைப்பட்டால் அதற்கேற்ப மருத்துவக் கழக விதிகளில் மாற்றம் செய்யப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.