தில்லி ஜந்தர் மந்தர் இனி போராட்டம் நடத்தும் இடமில்லை! உள்துறை அமைச்சகம்! தில்லி ஒரு சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது! ராகுல் காந்திஓனர்களின் பாணியில்... போராடவிருந்த மருத்துவப் பணியாளர்கள் வீட்டுக் காவல்! உதயநிதி கண்டனம்மரகதம் குமரவேல், சத்யபாமா தவெக எம்எல்ஏக்களாக பதவியேற்பு!பொய் பிரசாரங்களை முறியடித்து வெற்றி பெற்றுள்ளோம்: மரகதம் குமரவேல்லஞ்சம் கொடுத்ததற்கு தானே சாட்சி! மரிய வில்சனுக்கு எதிரான மனு தள்ளுபடிஜேஎன்யு மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு! காங்கிரஸ் எம்.பி. மீது எஃப்ஐஆர் பதிவு!இந்தியா கூட்டணி தலைவர்களை சந்திக்க தலைமை நீதிபதி மறுப்பு!

அதிகரித்து வரும் வெப்பம் சென்னையின் எதிர்காலம் குறித்து சிந்திக்க வைக்கிறது! அண்ணாமலை

சென்னை நாளையொட்டி 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் தலைவரான அண்ணாமலை பதிவு...

Annamalai

அண்ணாமலை - எக்ஸ்

Published On :

குறைந்து வரும் பசுமையும், அதிகரித்து வரும் வெப்பமும் சென்னையின் எதிர்காலம் குறித்து நம்மை சிந்திக்க வைக்கிறது என அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.

சென்னை உருவான ஆக. 22 ஆம் தேதி (இன்று) சென்னை நாள் கொண்டாடப்படுவதையொட்டி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் தலைவரான அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில்,

"வரலாற்றையும், பாரம்பரியத்தையும், நவீனத்தையும் ஒருங்கே கொண்டிருக்கும் சென்னை மாநகரில் வசிக்கும் அனைவருக்கும், இனிய சென்னை தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்பும் அரவணைப்பும், கலையும், கல்வியும், அனைவரின் பங்களிப்பும் இணைந்து உருவாக்கிய நமது சென்னை மாநகரம், நம்பி வந்தவர்களை தன்னுடையவர்களாக ஏற்றுக் கொள்ளும் தனிச்சிறப்பு கொண்டது.

சென்னை என்பது ஒரு பெயர் மட்டுமல்ல, அது ஒரு உணர்வு. ஆனால் நாளுக்கு நாள் குறைந்து வரும் பசுமையும், அதிகரித்து வரும் வெப்பமும் சென்னையின் எதிர்காலம் குறித்து நம்மை சிந்திக்க வைக்கிறது.

இந்த சென்னை தினத்தில், ஒவ்வொரு சென்னை மக்களும் ஒரு உறுதி எடுத்துக்கொள்வோம். முடிந்தவரை பல மரங்களை வளர்ப்போம். நம் தெருக்கள், வீடுகள், பள்ளிகள், அலுவலகங்கள் என ஒவ்வொரு இடத்திலும் பசுமையை மீட்டெடுப்போம். வருங்கால தலைமுறைக்கு பசுமையான சென்னையை பரிசளிப்போம்" என்று பதிவிட்டுள்ளார்.

Summary

Rising temperatures make one reflect on Chennai future: Annamalai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.