மறுவெளியீடாகும் அண்ணாமலை திரைப்படம்!
அண்ணாமலை மறுவெளியீடாகிறது...

நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த்தின் அண்ணாமலை திரைப்படம் மறுவெளியீடாக உள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அண்ணாமலை. இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் இசையமைப்பாளர் தேவா இசையமைப்பில் உருவான இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
பால் வியாபாரியான ரஜினி தன் நண்பனின் துரோகத்தால் வாழ்வில் மீண்டும் பெரிய இடத்தை நோக்கி செல்லும் கதையாக இது உருவாகியிருந்தது. நடிகர்கள் குஷ்பூ, சரத் பாபு, மனோரமா, ஜனகராஜ், ராதா ரவி என பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்த இப்படம் இன்றும் ரஜினியின் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த்தின் பிறந்த நாளான டிச. 12 ஆம் தேதி அண்ணாமலை திரைப்படம் மறுவெளியீடாகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்திரைப்படம் 4கே தொழில்நுட்பத்தில் தர மெறுகூட்டல் செய்யப்பட்டு வெளியிடப்படுவதால் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அண்ணாமலை கடந்தாண்டு ரஜினியின் பிறந்த நாளுக்கு சில திரைகளில் மறுவெளியீடானது குறிப்பிடத்தக்கது.
Actor Rajinikanth's film 'Annamalai' is being re-released.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


