சூலூர் சிறுமி கொலை வழக்கு: கைதான கார்த்திக், மோகன் இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு! திருப்பரங்குன்றம் தூணில் நாளை தீபம்! உத்தரவை செயல்படுத்த ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் குழு!இருப்பில் உணவு, நீர், கையில் பணம்! கோவிட் காலத்தைவிட மோசமாக 2027! ஏஐ ஆராய்ச்சியாளர் எச்சரிக்கைதிருப்பரங்குன்றம் கல் தூணில் நாளை தீபமேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவுமதுரை ஆட்சியரின் முதற்கட்ட அறிக்கை நிராகரிப்பு: திருப்பரங்குன்றம் வழக்கில் உச்ச நீதிமன்றம்தூணில் தீபம் ஏற்றுவது என் வேலையல்ல? மதுரை ஆட்சியர் தரப்பு வாதம்!திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உத்தரவை செயல்படுத்தினீர்களா? உச்ச நீதிமன்றம் கேள்விதொகுதி மறுவரையறை நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை! மு.க. ஸ்டாலின்அரசியலுக்கு வருகிறாரா? நடிகை த்ரிஷா சென்ற சிருங்கேரி சாரதா கோயிலில் என்ன விசேஷம்?121 கிலோ! திருப்பதி காணிக்கையில் வரலாறு படைத்த சென்னை தம்பதி யார்? என்னென்ன ஆபரணங்கள்? படங்கள்!அம்பாசமுத்திரம், பெருந்துறை இடைத்தேர்தலுக்கான தடை நீக்கம்: உயர்நீதிமன்றம் தீர்ப்பு!டெல்டா மாவட்டங்களில் பயிர் சாகுபடி பாதிப்பு: முதல்வர் விஜய் ஆலோசனை! ஆவடி மாநகராட்சி மக்களின் கவனத்துக்கு... புகார்கள் தெரிவிக்க மொபைல் செயலி!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (நவ. 27)பறவைகள் உயிரிழப்பு: சென்னை கிண்டி பூங்கா நவ. 30 வரை மூடல்!பெரம்பூர் தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய் மனு தள்ளுபடி!

சட்டமும் நீதியும் அதிகாரத்தில் இருப்பவர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டது: அண்ணாமலை

சட்டமும் நீதியும் அதிகாரத்தில் இருப்பவர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டது என்று வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்திருப்பது பற்றி...

CM Vijay | Annamalai

முதல்வர் விஜய் | அண்ணாமலை - கோப்புப் படம்

Updated On :

சட்டமும் நீதியும் அதிகாரத்தில் இருப்பவர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டது என்று வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக, உச்சநீதிமன்றம் இன்று, நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே அவமதிக்கும் தமிழக அரசின் பிடிவாதமான போக்கிற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

நீதிமன்றத்தின் உத்தரவு என்பது அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அழைப்பல்ல, அது அரசு, அரசு அதிகாரிகள் மற்றும் சட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து அமைப்புகளையும் கட்டுப்படுத்தும் உத்தரவு என்பதை உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும், நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்த மறுத்த திருப்பரங்குன்றம் கோயில் அறங்காவலர் குழுவையும் இடைநீக்கம் செய்து, நாளை (நவம்பர் 28) மத்திய ரிசர்வ் படை பாதுகாப்புடன் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றவும், முருகப்பெருமானின் பக்தர்கள் தீபம் ஏற்ற அனுமதிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

இனியாவது தமிழக அரசு தனது பிடிவாதத்தைக் கைவிட்டு, நீதிமன்றத்தின் உத்தரவுக்கு மதிப்பளிக்க வேண்டும். லட்சக்கணக்கான முருக பக்தர்களின் நம்பிக்கையோடும், இறை உணர்வோடும் விளையாடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

சட்டமும் நீதியும் அதிகாரத்தில் இருப்பவர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டது. ஆட்சியாளர்களுக்குப் பிடித்திருக்கிறதா, இல்லையா என்பது முக்கியமல்ல, நாட்டின் சட்டமும் நீதிமன்றத்தின் உத்தரவுமே இறுதியானவை.

இந்தச் சூழலில், அனைத்து அரசியல் கட்சிகளும் மத அமைப்புகளும் சற்று ஒதுங்கி நின்று, முருகப் பெருமானின் பக்தர்கள் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு வழிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இது இந்த நிகழ்வு அமைதியான முறையில் நடைபெறுவதையும், பக்தர்கள் எவ்வித இடையூறுமின்றித் தங்கள் நம்பிக்கையைப் பின்பற்றுவதையும் உறுதிசெய்ய உதவும் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.