தையூர் கொலை வழக்கு: கைதான இருவர் தவெகவிலிருந்து நீக்கம் உ.பி.யில் சர்க்கரை தட்டுப்பாடு இல்லை: முதல்வர் யோகி ஆதித்யநாத் திமுக உள்கட்சித் தேர்தல் எப்போது? மு.க. ஸ்டாலின் அறிவிப்பு எம்எல்ஏ-க்களுக்கு சென்னையில் 2 கிரவுண்ட் இடம் தருவதாக சொன்னது யார்? செங்கோட்டையன் கோப்பைகளை வெல்வதே என் வேலை: கௌதம் கம்பீர் பெங்களூர் அறிவியல் கல்வி மைய மாணவர் தற்கொலை! 15 நாள்களில் 2வது சம்பவம்எத்தனாலுக்கும் சர்க்கரை விலையேற்றத்துக்கும் தொடர்பில்லை: மத்திய அரசு

கூலிப்படைத் தலைவர்களாக மாறிவரும் தவெக நிர்வாகிகள்: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

தவெக நிர்வாகிகள் கூலிப்படை தலைவர்களாக மாறிவருவதாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

Nainar Nagendran

நயினார் நாகேந்திரன் - கோப்புப் படம்

Published On :22 ஆகஸ்ட் 2026, 7:07 pm IST

தவெக நிர்வாகிகள் கூலிப்படை தலைவர்களாக மாறிவருவதாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

சென்னை கேளம்பாக்கம் அருகே தனது மகளை காதலித்தவரை கூலிப்படை வைத்து தந்தையே கொலை செய்ததாகச் செய்திகள் வெளியாகின. இதில், அந்த நபர் தவெகவைச் சேர்ந்தவர் என்று கூறப்பட்ட நிலையில், அதுதொடர்பாக கண்டனம் தெரிவித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “கூலிப்படை தலைவர்களாக மாறிவரும் தவெக நிர்வாகிகள். கேளம்பாக்கம் அருகே தையூரில் தவெக நிர்வாகியான ஏழுமலை என்பவர் தனது மகளின் காதலனை கூலிப்படை ஏவி கொலை செய்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன.

விஜய் அவர்கள் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றது முதல், தவெக நிர்வாகிகளின் அராஜகங்கள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள், ரவுடியிசம், மாமூல் பிரச்சினைகள் என ஒரு பெரிய சட்டவிரோத வலையமைப்பே தவெகவிற்குள் உருவாகிக் கொண்டிருக்கிறது என்பது அனைவருக்கும் வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது.

ஆனால், கட்சித் தலைமை அதை கவனிக்க மறுப்பது கண்டனத்திற்குரியது. ஒரு பிரச்சினை நடந்த பிறகு நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்குவதும், கைது செய்வதும் வெறும் கண்துடைப்பு நடவடிக்கைகள் மட்டுமே என்பதை திரு. ஜோசப் விஜய் அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். தனது கட்சிக்குள் ’நிர்வாகிகள்’ என்ற போர்வையில் ஒளிந்திருக்கும் குற்றவாளிகளின் மீது கடும் நடவடிக்கைகள் எடுத்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Summary

TVK functionaries turning into leaders of mercenary gangs: Nainar Nagendran's allegation!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.