FOLLOW US

ON GOOGLE DISCOVER

காங்கிரஸ் இல்லையென்றால் தவெக கதையை அமித்ஷா முடித்திருப்பார்: மாணிக்கம் தாகூர்இன்னும் 2 ஆண்டுகளில் அறிவாலயம் வாடகைக்கு விடப்படும்: நிர்மல்குமார்அமெரிக்காவின் பொருளாதாரப் போரில் பங்கேற்கும் நாடுகள் எதிரிகளே: ஈரான் திட்டவட்டம்வங்காள விரிகுடாவில் 22 பேருடன் மூழ்கிய சரக்கு கப்பல்: தேடுதல் பணி தீவிரம்

இந்தியாவையே ஆளும் சக்தி படைத்தவர் விஜய்: அமைச்சர் செங்கோட்டையன்

இந்தியாவையே ஆளுகிற சக்தி விஜய்தான் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியது குறித்து...

CM Vijay

முதல்வர் விஜய் - கோப்புப் படம்

Published On :23 ஆகஸ்ட் 2026, 10:28 am IST

இந்தியாவையே ஆளுகிற சக்தி விஜய்தான் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

திருப்பூரில் தவெகவின் 100 நாள் சாதனை விளக்கப் பொதுக் கூட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது, "நான் எம்ஜிஆர், ஜெயலலிதாவுடன் பயணித்துள்ளேன். இவ்விரு தலைவர்களுக்குப் பிறகு, அவர்களின் வழியில் தமிழ்நாட்டை மட்டுமல்ல, எதிர்கால இந்தியாவையே ஆளுகிற சக்திதான் விஜய்.

ஒரு வாரத்துக்கு முன்னர், வட மாநிலத்திலிருந்து சிலர் என்னைச் சந்தித்துப் பேசினர். தமிழக முதல்வர் விஜய்யை போல, அவர்களுக்கும் முதல்வர் கிடைப்பார்களா என்று கேட்டனர். விஜய்யை தவிர வேறு எவராலும் முடியாது என வட மாநிலங்களிலும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். 1967, 1977-க்கு பிறகு 2026-ல் வரலாறு படைக்கப்பட்டிருக்கிறது.

தவெக தலைவர் எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடியும், தமிழ்நாட்டு மக்களுக்காகவே வாழ்கிறார். இதனால்தான் அவரை தமிழக மக்கள் நேசிக்கின்றனர்.

திரையுலகின் உச்சத்தில் வந்தவர். திரையுலகில் அவரை வெல்வதற்கு எவராலும் முடியவில்லை. இன்று அவர் அரசியலுக்கு வந்திருக்கிறார். அவர் இருக்கும்வரையில் அவர்தான் நிரந்தர முதல்வர் என்ற வரலாற்றைப் படைக்கவிருக்கிறார்" என்று தெரிவித்தார்.C

Summary

CM Vijay has the power to rule all of India, says Minister KA Sengottaiyan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.