இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

இன்னும் 2 ஆண்டுகளில் அறிவாலயம் வாடகைக்கு விடப்படும்: நிர்மல்குமார்

அண்ணா அறிவாலயத்தை வாடகைக்கு விடும் நிலைக்கு திமுக செல்லும் என அமைச்சர் நிர்மல் குமார் கூறியது குறித்து...

அண்ணா அறிவாலயம் | நிர்மல் குமார் - கோப்புப் படம்

Published On :

வரும் காலங்களில் அண்ணா அறிவாலயத்தை வாடகைக்கு விடும் நிலைக்கு திமுக சென்று விடும் என அமைச்சர் நிர்மல் குமார் விமர்சித்துள்ளார்.

மதுரையில் தவெக பொதுக் கூட்டத்தில் அமைச்சர் நிர்மல் குமார் பேசியதாவது, "நடந்து முடிந்த தேர்தலில் திமுகவை மக்களே பழிவாங்கி விட்டனர். அவர்களை நாங்கள் ஏன் தனியாக பழிவாங்க வேண்டும்?

இத்தனை ஆண்டுகளில் நீங்கள் என்னென்ன கொள்ளை அடித்தீர்கள்? என்னென்ன செய்தீர்கள்? என்பதைப் பார்த்த மக்களே, உங்களைத் தூக்கி வெளியில் போட்டு விட்டார்கள்.

முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் தீய சக்தி திமுகவை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று கூறினர். அதற்காகத்தான் அந்தக் கட்சியையே (அதிமுக) தொடங்கினர். ஆனால், தற்போது திமுகவை விஜய் ஒழித்துக் கட்டி விட்டார்.

இனிமேல், அறிவாலயத்தை வெள்ளையடித்து, வாடகைக்குத்தான் விட வேண்டும்.

முரசொலி அறக்கட்டளைக்குத்தான் அவர்களுக்கு இவ்வளவு போட்டி. அதில்தான் சொத்துகள் அனைத்தும் உள்ளன. அந்த அறக்கட்டளையை யார் எந்த குடும்பம் கைப்பற்றுகிறது? என்பதுதான் போட்டி.

அறக்கட்டளையைக் கைப்பற்றிவிட்டு, அறிவாலயத்தை வாடகைக்கு விட்டுவிட்டு, வேறு வேலையைப் பார்க்கச் சென்று விடுவர்.

இது (தவெக) மக்களுக்கான அரசு. ஒவ்வோர் ஆண்டும் உங்களுக்குத் தேவையான அனைத்தும் கிடைக்கும். வரும் 5 ஆண்டுகளில் நிச்சயமாக ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வருவோம்" என்று தெரிவித்தார்.

Summary

DMK will reach the stage of having to rent out Anna Arivalayam, says Minister Nirmal Kumar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.