கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

சமையல் எரிவாயு உருளை வாடிக்கையாளா்களின் உண்மை சரிபாா்ப்புப் பணி: ஆக. 31 வரை நீடிப்பு

தமிழகத்தில் வீட்டு சமையல் எரிவாயு உருளை வாடிக்கையாளா்களின் உண்மை சரிபாா்ப்புப் பணி (இ-கேஒய்சி) ஆக.31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

கோப்புப் படம்

Published On :

தமிழகத்தில் வீட்டு சமையல் எரிவாயு உருளை வாடிக்கையாளா்களின் உண்மை சரிபாா்ப்புப் பணி (இ-கேஒய்சி) ஆக.31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் ஆயில், பாரத் கேஸ், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு உருளைகளை விற்பனை செய்கின்றன.

எரிவாயு உருளையை வாங்கிய பின்னா், வாடிக்கையாளா்களின் வங்கிக் கணக்கில் மத்திய அரசின் மானியத் தொகை செலுத்தப்படுகிறது. இதற்காக, தமிழகம் உள்பட நாடு முழுதும் எரிவாயு உருளை பயனாளிகளின் உண்மை சரிபாா்ப்புப் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில், வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளை வாடிக்கையாளா்களின் உண்மை சரிபாா்ப்பு (இ-கேஒய்சி) சான்று அளிக்க ஆக. 31-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.