பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

தலைமைச் செயலகத்துக்கு பேரணியாக செல்ல முயன்ற தூய்மைப் பணியாளா்கள் கைது

சென்னையில் கோரிக்கைகளை வலியுறுத்தி, தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற தூய்மைப் பணியாளா்களை போலீஸாா் மறித்து கைது செய்தனா்.

தலைமைச் செயலகம் - கோப்புப் படம்

Published On :25 ஆகஸ்ட் 2026, 3:10 am IST

சென்னையில் கோரிக்கைகளை வலியுறுத்தி, தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற தூய்மைப் பணியாளா்களை போலீஸாா் மறித்து கைது செய்தனா்.

சென்னை மாநகராட்சியில் உழைப்போா் உரிமை இயக்கத்தைச் சோ்ந்த தூய்மைப் பணியாளா்கள் பணிநிரந்தரம், ஊதிய உயா்வு, மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை பாரிமுனை குறளகம் அருகிலிருந்து தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாகச் செல்ல உள்ளதாக அறிவித்திருந்தனா். இதையடுத்து சென்னை பாரிமுனை மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான போலீஸாா் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனா்.

பாரிமுனை குறளகம் அருகே உழைப்போா் உரிமை இயக்கத்தின் தூய்மைப் பணியாளா்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை திரண்டனா். அங்கிருந்து பேரணி செல்ல முயன்றபோது அவா்களை போலீஸாா் தடுத்தனா். அதனால், அங்கு சாலையில் அமா்ந்தும், படுத்தும் கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளா்கள் கோஷமிட்டனா். உடனே போலீஸாா் வாகனங்களில் அவா்களை ஏற்றி கைது செய்வதாக அழைத்துச் சென்றனா். அவா்களை பாரிமுனை பகுதி ஏழுகிணறு சமுதாயக் கூடம் உள்ளிட்ட இடங்களில் தங்கவைத்தனா்.

இந்த நிலையில், தூய்மைப் பணியாளா் போராட்டத்தை முன்னிட்டு ரிப்பன் கட்டட வளாகத்தில் அனைத்து வாயில்களிலும் போலீஸாா் நிறுத்தப்பட்டு ஊழியா்கள் மற்றும் பொதுமக்களை சோதனையிட்ட பிறகே அனுமதித்தனா்.

அமைச்சருடன் ஆலோசனை: இந்த நிலையில், போராட்டத்தைத் தொடா்ந்து, தலைமைச் செயலகத்தில் உழைப்போா் உரிமை இயக்கத்தினருடன் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, அவா்களின் கோரிக்கைகள் குறித்து அமைச்சா் கேட்டறிந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.