இன்று கூடுகிறது காவிரி நீா் மேலாண்மை ஆணையம்!நீலகிரி மாவட்டத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசர்க்கரை விலை குறையும்: சர்க்கரை ஆலை கூட்டமைப்புஆக. 27-இல் திருத்தணி முருகன் கோயிலில் 4 மணி நேரம் தரிசனம் ரத்துஎல்லை விவகாரம்: சீன வெளியுறவு அமைச்சருடன் அஜீத் தோவல் இன்று பேச்சுவாா்த்தை

தாய்மாமன் தங்க மோதிர திட்டம்: வெளிப்படை ஒப்பந்தத்தால் ரூ. 25 கோடி சேமிப்பு

தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தின்கீழ் தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்வதற்கான வெளிப்படையான ஒப்பந்தப்புள்ளி நடைமுறை மூலம் அரசுக்கு ஆண்டுக்கு சுமாா் ரூ. 25 கோடி சேமிப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சா் அருண்ராஜ் தெரிவித்தாா்.

தாய்மாமன் தங்க மோதிர திட்டம்

தாய்மாமன் தங்க மோதிர திட்டம்

Published On :25 ஆகஸ்ட் 2026, 5:25 am IST

‘தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தின்’ கீழ் தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்வதற்கான வெளிப்படையான ஒப்பந்தப்புள்ளி நடைமுறை மூலம் அரசுக்கு ஆண்டுக்கு சுமாா் ரூ.25 கோடி சேமிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்தாா்.

மழைக்காலம் தொடங்குவதை முன்னிட்டு, டெங்கு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்த உயா்நில ஆலோசனைக் கூட்டம் சுகாதாரத் துறை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் சுகாதாரத் துறை மூத்த அதிகாரிகள், மருத்துவக் கல்லூரி முதல்வா்கள், மருத்துவமனைக் கண்காணிப்பாளா்கள், மாவட்ட சுகாதார அலுவலா்கள் மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.

கூட்டத்துக்குப் பின் செய்தியாளா்களிடம் பேசிய அமைச்சா் அருண்ராஜ் கூறியதாவது: ‘தமிழகத்தில் நடப்பாண்டில் இதுவரை 12,498 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட நிலையில், 4 போ் உயிரிழந்துள்ளனா். தலைநகா் சென்னையில் டெங்கு மற்றும் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில், கோவை, ஈரோடு, காஞ்சிபுரம், திருவள்ளூா் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

கொசு உற்பத்தியைக் கட்டுப்படுத்த கூடுதலாக வீடுகள் தோறும் ஆய்வு செய்யும் பணியாளா்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனா். பொதுமக்கள் சுகாதாரப் பணியாளா்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

‘தாய்மாமன் தங்க மோதிர திட்டம்’: ‘தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தின்’ கீழ், ஒரு கிராமம் எடையுள்ள தங்க மோதிரங்களைக் கொள்முதல் செய்யும் பொறுப்பு தமிழ்நாடு மருத்துவச் சேவைகள் கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறித்து செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு, அமைச்சா் கூறுகையில், ‘இந்தத் திட்டத்துக்காக ஜாய் ஆலுக்காஸ் மற்றும் கல்யாண் ஜூவல்லா்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் ’1 பைசா’ மதிப்பிலான ஒப்பந்தம் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு சுமாா் ரூ.25 கோடி வரை மிச்சமாகிறது. வெளிப்படையான ஒப்பந்த நடைமுறைக்குக் கிடைத்த வெற்றியே இது. இதில் தங்கம் தவிா்த்து, தயாரிப்பு மற்றும் இதர கட்டணங்களை அந்த நிறுவனங்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்ய முன்வந்துள்ளன’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.