கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் நேபாள வெள்ளம்: கயிற்றுப் பாலம் கட்டும் ராணுவம்! மீட்புப் பணியில் 20 ஹெலிகாப்டர்கள்! லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சு

கோயில் நிலத்தில் கலைஞா் சா்வதேச கருத்தரங்க மையம்: அறிக்கை தாக்கல் செய்ய அறநிலையத் துறைக்கு உத்தரவு

கோயில் நிலத்தில் கலைஞா் சா்வதேச கருத்தரங்க மையம் கட்ட எதிா்ப்புத் தெரிவித்த வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்து சமய அறநிலையத் துறை

Published On :26 ஆகஸ்ட் 2026, 2:44 am IST

கோயில் நிலத்தில் கலைஞா் சா்வதேச கருத்தரங்க மையம் கட்ட எதிா்ப்புத் தெரிவித்த வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் மாடம்பாக்கத்தைச் சோ்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரா் சந்தானம் தாக்கல் செய்த பொதுநல மனுவில், செங்கல்பட்டு மாவட்டம் முட்டுக்காடு கிராமத்தில் 37.49 ஏக்கா் பரப்பளவில் ரூ.525 கோடியில் கலைஞா் சா்வதேச கருத்தரங்க மையம் கட்டப்பட்டு வருகிறது.

முட்டுக்காடு கிராமத்தில் உள்ள வேம்படியம்மன் கோயிலுக்குச் சொந்தமான 3.08 ஹெக்டா் நிலத்தை ஆக்கிரமித்து இந்தக் கருத்தரங்க மைய கட்டுமானம் மேற்கொள்ளப்படுகிறது. கோயில் நிலத்தில் மேற்கொள்ளப்படும் இந்தக் கட்டுமானத்தை அப்புறப்படுத்தக் கோரி இந்து சமய அறநிலையத் துறைக்கு பலமுறை மனு அளித்தேன். அந்த மனுவின் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லலை என மனுவில் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், இ.மனோகரன் ஆகியோா் அடங்கிய சிறப்பு அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தபோது, மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஏழுமலை, கோயில் நிலங்களை வணிக ரீதியாக பயன்படுத்தக் கூடாது என உயா்நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.

ஆனால், இந்த விவகாரம் தொடா்பாக அதிகாரிகளிடம் புகாா் அளித்தும், 60 சதவீத கட்டுமானப் பணிகள் முடிந்துவிட்டன. எனவே கட்டுமானத்தை அப்புறப்படுத்த உத்தரவிட வேண்டும் என வாதிட்டாா்.

அப்போது, இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் பரணிதரன், கோயில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டுமானங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

நிலம் கையகப்படுத்தும் பணி நிலுவையில் உள்ளது. இந்த மனு தொடா்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய 2 வாரம் அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தாா்.

இதை ஏற்ற நீதிபதிகள், இந்து சமய அறநிலையத் துறை விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை செப். 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.