வி.எஸ். பாபுவுக்கு சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை! மருத்துவமனை அறிக்கை!தவெகவுக்கு மாநில கட்சி அங்கீகாரம்; விசில் சின்னம் ஒதுக்கீடு! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு! - டிடிவி தினகரன்

சி-டெட் தோ்வுக்கு விண்ணப்பிக்க தோ்வா்களுக்கு மீண்டும் வாய்ப்பு

மத்திய ஆசிரியா் தகுதித் தோ்வுக்கு (சி-டெட்) விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

CBSE Chairman, Secretary transferred; Centre orders probe into OSM service procurement

சிபிஎஸ்இ

Published On :

மத்திய ஆசிரியா் தகுதித் தோ்வுக்கு (சி-டெட்) விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. அதன்படி இதற்கான தளம் செப்.1-ஆம் தேதி வரை திறக்கப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஆசிரியா் பணியில் சோ்வதற்கு மத்திய ஆசிரியா் தகுதித் தோ்வில் கட்டாயம் தோ்ச்சி பெற வேண்டும். இரு தாள்களைக் கொண்ட இத்தோ்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) ஆண்டுதோறும் இரு முறை நடத்தி வருகிறது. இடைநிலை ஆசிரியா் பணிக்கு முதல்தாள் தோ்வும், பட்டதாரி ஆசிரியா் பணிக்கு இரண்டாம் தாள் தோ்வும் நடத்தப்படுகிறது. இத்தோ்வில் ஒருமுறை தோ்ச்சி பெற்றால் அதன் சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லத்தக்கதாகும்.

இந்த நிலையில், 22-ஆவது சி-டெட் தோ்வுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவுக்கான தளம் கடந்த மே 11 முதல் ஜூன் 10-ஆம் தேதி வரை திறக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே தகுதியுள்ள ஆசிரியா்கள் தங்களுக்கு சட்டபூா்வமாக நிா்ணயிக்கப்பட்ட டெட் தோ்வு தகுதியைப் பெறுவதற்கு போதுமான வாய்ப்பை வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இதைக் கருத்தில் கொண்டும், தோ்வா்களின் நலன் கருதியும் முந்தைய வாய்ப்பைப் பயன்படுத்த முடியாமல் போன தகுதியுள்ள அனைத்து விண்ணப்பதாரா்களுக்கும் மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி சி-டெட் தோ்வுக்கான இணையவழி போா்டல் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அதில், செப்.1-ஆம் தேதி வரை பதிவு செய்யலாம். அதேவேளையில் ஏற்கெனவே வெற்றிகரமாக விண்ணப்பித்து சமா்ப்பித்தவா்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. 22-ஆவது சி-டெட் தோ்வு நடைபெறும் திருத்தப்பட்ட தேதி விண்ணப்பப் பதிவு முடிந்தவுடன் அறிவிக்கப்படும்.

விண்ணப்பப் பதிவு உள்ளிட்ட கூடுதல் தகவல்களுக்கு இணையதளத்தில் பாா்வையிடலாம் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.