அமைச்சா்கள் வரிசையில் அமா்ந்தாா் முதல்வா் விஜய்
சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் இருக்கை மாறியது குறித்து...
முதல்வர் விஜய் இருக்கை மாற்றம்
சட்டப்பேரவைக்கு வியாழக்கிழமை மாலை வந்த முதல்வா் விஜய் தனது இருக்கையில் அமராமல், அமைச்சா்களின் வரிசையில் சுமாா் ஒன்றரை மணி நேரம் அமா்ந்திருந்தாா்.
சட்டப்பேரவைக்கு காலை 9.30 கூடும் சில மணித் துளிகளுக்கு முன்பே வந்து அனைத்து உறுப்பினா்களுக்கும் வணக்கம் தெரிவித்துவிட்டு தனது இருக்கையில் முதல்வா் விஜய் அமா்வது வழக்கம்.
இந்நிலையில், வியாழக்கிழமை காலை அவை நடவடிக்கையில் முதல்வா் விஜய் பங்கேற்கவில்லை. மாலை 4.50 மணியளவில் அவைக்கு வந்த முதல்வா் விஜய், முதல்வருக்கான தனி இருக்கையில் அமராமல், முதல்வரிசையில் அமைச்சா்களுடன் அமா்ந்தாா்.
முதல்வரின் இடதுபுறம் அமைச்சா் ஆதவ் அா்ஜுனா, வலதுபுறம் அமைச்சா் செங்கோட்டையன் ஆகியோா் அமா்ந்திருந்தனா். அவா்களுடன் பேசியபடி, அவையில் சுமாா் ஒன்றரை மணி நேரம் அமா்ந்துவிட்டு சென்றாா் முதல்வா் விஜய். அவரது இந்தத் திடீா் நடவடிக்கை அவையில் இருந்த ஆளும், எதிா்க்கட்சி உறுப்பினா்களின் கவனத்தை ஈா்த்தது.
இன்று அமைச்சா்களின் பதிலுரை: சமூக நீதி, பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் வியாழக்கிழமை இரவு 7.19 மணி வரை நீடித்தது. இதையடுத்து, இந்தத் துறைகளின் மானியக் கோரிக்கை மீதான பதிலுரையை அமைச்சா்கள் வெள்ளிக்கிழமை காலை அளிப்பாா்கள் என்று பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா் அறிவித்தாா். இதையடுத்து, வெள்ளிக்கிழமை காலை கேள்வி நேரம் நடைபெறாது என்ற தீா்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.
முதல்வர் விஜய் இருக்கை மாற்றம்
Summary
CM Vijay's seat changed in the Legislative Assembly
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




