தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்பு

மாநகராட்சிக்கு ரூ. 28.3 லட்சம் வரி செலுத்தாத திமுக!

கரூர் மாநகராட்சியில் அதிகளவில் வரி பாக்கி வைத்திருப்போர் பட்டியலில் திமுக இரண்டாமிடம் பிடித்திருப்பது குறித்து...

DMK fails to pay Rs 28.3 lakh in taxes to Karur Corporation

கரூர் மாநகராட்சிக்கு வரி செலுத்தாத திமுக - சித்திரிப்பு

Published On :

கரூர் மாநகராட்சிக்கு அதிக சொத்து வரி நிலுவை வைத்திருப்போர் பட்டியலில் மாவட்ட திமுக அலுவலகம் இரண்டாமிடம் பிடித்துள்ளது.

கரூர் மாநகராட்சியின் முதன்மை வரி வருவாயாக சொத்து வரி இருந்து வருகிறது. இதனை வைத்தே குப்பை அகற்றுதல், சாலை பராமரிப்பு, தெரு விளக்குகள், பூங்கா, நோய்த் தடுப்பு, பொது சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால், மாநகராட்சியின் 1 முதல் 48 வரையிலான வார்டுகளில் வரி வசூல் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மாநகராட்சிக்கு அதிகளவில் சொத்து வரி நிலுவை வைத்திருப்போரின் 100 பேர் பட்டியலை கரூர் மாநகராட்சியின் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

பட்டியலின்படி, 33-வது வார்டில் கரூர் திண்டுக்கல் சாலையில் உள்ள ராமசாமி - நாராயணசாமி ஆகியோர் ரூ. 36.48 லட்சம் வரி நிலுவை வைத்து முதலிடத்தில் உள்ளனர்.

தொடர்ந்து, 30-வது வார்டில் கௌரிபுரம் விரிவாக்கத்தில் இருக்கும் திமுக மாவட்ட அலுவலகம் இரண்டாமிடத்தில் உள்ளது. திமுக அலுவலகம், 2008-ல் திறக்கப்பட்டபோது, சொத்து வரியாக ஆண்டுக்கு ரூ. 1.18 லட்சம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது, ஆண்டுக்கு ரூ. 2.36 லட்சம் செலுத்த வேண்டும்.

இதன் மூலம், திமுகவின் கரூர் அலுவலகம் 2008 முதல் 2026 மார்ச் மாதம் வரையில் மொத்தம் ரூ. 28,33,698 சொத்து வரி நிலுவை வைத்துள்ளது.

Summary

DMK fails to pay Rs 28.3 lakh in taxes to Karur Corporation

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.