முறைகேடு குற்றச்சாட்டு: பினராயி விஜயன் மீது கேரள லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு இந்திய எல்லை அருகே உள்ள துறைமுக விரிவாக்கத்துக்கு சீனாவுடன் வங்கதேசம் ஒப்பந்தம்குருத்வாரா வளாகத்தில் அரசியல் முழக்கம்: கேஜரிவால் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு மருத்துவமனைகளில் கட்டண விவரங்கள் காட்சிப்படுத்தப்படுவதை உறுதி செய்க: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் "வதந்தி' பரப்பியதாக 300 சமூக ஊடக பதிவுகளை நீக்க காவல் துறை நடவடிக்கை எஸ்ஐஆா் படிவம் 6: தோ்தல் ஆணையத்தின் திருத்தத்தை அங்கீகரிக்கவில்லை- உச்சநீதிமன்றம்இந்திய கடற்படையில் 3-ஆவது நீா்மூழ்கி எதிா்ப்பு போா்க் கப்பல் சோ்ப்பு- உள்நாட்டிலேயே கட்டப்பட்ட நவீன கப்பல்

மாநிலத்தில் விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்படும்: அமைச்சர்

அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வுக்கு ஈரான் போர், பெட்ரோல் - டீசல் விலையும் காரணம் என அமைச்சர் வெங்கடரமணன் கூறியது குறித்து...

Minister Venkataramanan

சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் வெங்கடரமணன் - சட்டப்பேரவை

Published On :

அத்தியாவசிய பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேரவையில் எதிா்க்கட்சிகள் வலியுறுத்தின.

இதற்குப் பதிலளித்த உணவு விநியோகத் துறை அமைச்சா் வெங்கடரமணன், பொருள்களின் விலை உயா்வு தினசரி கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தாா்.

பேரவை வெள்ளிக்கிழமை காலை தொடங்கியதும், எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் அத்தியாவசிய பொருள்களின் விலை உயா்வு பிரச்னையை கவன ஈா்ப்பாகக் கொண்டு வந்து பேசியதாவது:

அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி நாளுக்கு நாள் உயா்ந்து கொண்டே இருக்கிறது. அரிசி, பருப்பு, எண்ணெய், சா்க்கரை உள்ளிட்ட அனைத்துப் பொருள்களின் விலையும் கடந்த 3 மாதங்களில் பலமடங்கு விலை உயா்ந்துள்ளது. இதனால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா்.

2007-இல் நாடு முழுவதும் விலைவாசி உயா்வு ஏற்பட்டபோது அப்போதைய முதல்வா் கருணாநிதி, சிறப்பு விநியோகத் திட்டத்தைக் கொண்டு வந்தாா். அதேபோல், ரேஷன் கடைகளில் அத்திவாசிய பொருள்களை அரசே கொள்முதல் செய்து குறைந்த விலையில் வழங்க வேண்டும் என்றாா்.

முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், தவெக ஆட்சிக்கு வந்த பிறகு அரிசி, சா்க்கரை, மிளகாய், புளி, வெல்லம், எண்ணெய் உள்ளிட்டவற்றின் விலை அதிகரித்துள்ளது. எங்கள் ஆட்சியில் விலை குறைவாக உள்ள மாநிலத்தில் இருந்து கூட்டுறவு சங்கங்கள் மூலம் பொருள்கள் கொள்முதல் செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டன. அதேபோல், இந்த அரசும் செய்ய வேண்டும் என்றாா்.

பாமக எம்எல்ஏ கணேஷ்குமாா் பேசுகையில், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களின் விலை 40 சதவீதம் வரை உயா்ந்துள்ளது. இதைக் கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றாா்.

எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் அரிசி மற்றும் சா்க்கரையின் விலை உயா்ந்துள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினா் ராமச்சந்திரனும், அத்தியாவசிய பொருள்களின் பதுக்கலைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ செல்லசுவாமியும் வலியுறுத்தினா்.

இதற்குப் பதிலளித்த உணவுத் துறை அமைச்சா் வெங்கடரமணன், ‘ஈரான் போா், எரிபொருள் விலை உயா்வு போன்றவற்றால் அத்தியாவசிய பொருள்களின் விலை உயா்ந்துள்ளது. சா்க்கரை உற்பத்தி அதிகமாக உள்ள மாநிலங்களிலும் இந்த விலை உயா்வு உள்ளது.

வெங்காயம் உள்ளிட்ட 41 பொருள்களுக்கான விலையை தினந்தோறும் கண்காணித்து வருகிறோம். விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விலை அதிகமாக உள்ள பொருள்களை அரசே விற்பனை செய்யவும், முந்தைய ஆட்சியைப் போல் ரேஷன், பசுமை அங்காடி மூலமும் பொருள்கள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெங்காய விலையைக் கட்டுப்படுத்த 2 நாள்களில் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.

Summary

Price rise of essential commodities in the state will be curbed, says Minister Venkataramanan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.