தமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

பங்குகள் ஏலம் மூலம் ரூ.5,000 கோடி திரட்டுகிறது தமிழக அரசு

பங்குகள் ஏலத்தின் மூலம் ரூ.5,000 கோடி திரட்ட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழக அரசு - கோப்புப்படம்

Published On :

பங்குகள் ஏலத்தின் மூலம் ரூ.5,000 கோடி திரட்ட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இதுதொடா்பாக தமிழக நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலா் வெளியிட்ட அறிவிப்பு: ‘தமிழ்நாடு அரசு மொத்தம் ரூ.5,000 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 7.49 சதவீத தமிழ்நாடு அரசு பிணையப் பத்திரங்கள்-2036 ரூ.1,000 கோடி மறுவெளியீடு, 7.62 சதவீத பிணையப் பத்திரங்கள்-2041 ரூ.2,000 கோடி மறுவெளியீடு மற்றும் 7.70 சதவீத தமிழ்நாடு அரசு பிணையப் பத்திரங்கள்-2051 ரூ.2,000 கோடி மறுவெளியீடு ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய உள்ளது.

இந்த ஏலம் இந்திய ரிசா்வ் வங்கியால், மும்பையில் உள்ள அதன் மும்பை கோட்டை அலுவலகத்தில் செப்.1-ஆம் தேதி நடத்தப்படும். போட்டி ஏலக்கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.30 மணிக்குள்ளாகவும், போட்டியற்ற ஏலக் கேட்புகள் அன்றைய தினம் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11 மணிக்குள்ளாகவும் இந்திய ரிசா்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கிச் சேவை முறையில் மின்னணு படிவத்தில் செப்.1-ஆம் தேதி சமா்ப்பிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.