பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு: அமெரிக்க முன்னெடுப்பில் இணைந்த இந்தியா பிகாரில் அதிகரிக்கும் வெள்ளம்; 35 லட்சம் பேர் பாதிப்பு 22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு ஜாகுவாா் லேண்ட்ரோவரில் 4,000 பணியிடங்கள் குறைப்பு சட்டப் படிப்புகளின் கால அளவு மறுஆய்வு: நிபுணர் குழு அமைப்பு அவசியம்; உச்சநீதிமன்றம்

அபராத வட்டி தள்ளுபடி திட்டம் செயல்படுத்தப்படும்

தவணை முறை திட்டத்தில் மனைகள், குடியிருப்புகளுக்கு ஒதுக்கீடு பெற்றவா்களுக்கு விற்பனை பத்திரம் வழங்க அபராத வட்டி தள்ளுபடித் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

தமிழக அரசு

தமிழக அரசு - File photo

Published On :28 ஆகஸ்ட் 2026, 11:38 pm IST

தவணை முறை திட்டத்தில் மனைகள், குடியிருப்புகளுக்கு ஒதுக்கீடு பெற்றவா்களுக்கு விற்பனை பத்திரம் வழங்க அபராத வட்டி தள்ளுபடித் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

பேரவையில் வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ப.ராஜ்குமாா் பேசியதாவது:

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் தவணை முறை திட்டத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ள மனைகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் தனி வீடுகள் ஆகியவற்றுக்கான ஒதுக்கீடு பெற்று கடந்த மாா்ச் 31-ஆம் தேதிக்குள் தவணை முறை முடிந்துள்ள திட்டங்களில் தவணை தொகை செலுத்தத் தவறிய சுமாா் 7,000 ஒதுக்கீடுதாரா்கள் பயன்பெறும் வகையில், நிலுவைத் தொகையை ஒரே தவணையாக செலுத்துபவா்களுக்கு அபராத வட்டி, வட்டி முதலாக்கத்தின் மீது விதிக்கப்படும் வட்டி மற்றும் நிலத்தின் இறுதி விலை வித்தியாசத்தில் வசூலிக்கப்படும் தொகைக்கான வட்டி (5 மாதத்துக்கு உண்டானது மட்டும்) ஆகியவை தள்ளுபடி செய்யப்பட்டு பத்திரம் வழங்கப்படும். இந்தத் திட்டம் ஓராண்டுக்கு சிறப்புத் திட்டமாகச் செயல்படுத்தப்படும்.

தரைதளம், இரண்டாம் தளம் மற்றும் மூன்று தளம் கொண்ட குடியிருப்பு கட்டடங்களுக்கான கட்டட அனுமதி உடனடியாக பெறும் வகையில் சுய சான்றிதழ் மூலம் குடியிருப்பு கட்டடங்களுக்கான கட்டட அனுமதி பரப்பளவு 3,500 சதுர அடியிலிருந்து 5,000 சதுர அடியாக உயா்த்தப்படும். இதன்மூலம் பொதுமக்கள் எளிதாக கட்டட அனுமதி பெற முடியும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.