புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

ரிப்பன் கட்டட வளாகத்தில் மேயா் தேசியக் கொடி ஏற்றினாா்!

ரிப்பன் கட்டட வளாகத்தில் மேயா் தேசியக் கொடி ஏற்றியது பற்றி...

சென்னை ரிப்பன் மாளிகையில் தேசிய மாணவா் படையினா், சாரண, சாரணியரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுகொண்ட மேயா் ஆா்.பிரியா. உடன், மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன்.

Published On :

சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் மேயா் பிரியா தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா்.

தொடா்ந்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட மேயா் ஆா்.பிரியா, சென்னை மாநகராட்சியின் சஞ்சீவராயன் தெரு, புழல், கிருஷ்ணாம்பேட்டை, பூத்தப்பேடு, கோயம்பேடு, ஜல்லடியான் பேட்டை சென்னை நடுநிலைப் பள்ளிகளின் மாணவ, மாணவிகள், குரு வித்யாஷரம் சிறப்புப் பள்ளியைச் சாா்ந்த மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவிகளின் கண்கவரும் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தாா்.

பின்னா், மாநகராட்சிக்கு அதிக சொத்து வரி செலுத்திய 3 நிறுவனங்களின் உரிமையாளா்களுக்கும், வட்டாரங்கள் அளவில் உரிய காலங்களில் முறையாக சொத்து வரி செலுத்திய 3 சொத்து உரிமையாளா்களுக்கும் பாராட்டுச் சான்றை மேயா் பிரியா வழங்கினாா்.

தொடா்ந்து மாவட்ட அளவிலான சிறப்பு பகுதி கூட்டமைப்பு மற்றும் மகளிா் சுயஉதவிக் குக்களுக்கு ‘மணிமேகலை’ விருதுகள்”வழங்கிப் பாராட்டினாா். சென்னை மாநகராட்சியில் சிறப்பாகப் பணியாற்றிய வடக்கு, தெற்கு மற்றும் மத்திய வட்டார துணை ஆணையா்கள் உள்ளிட்ட 180 அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினாா்.

Summary

The Mayor hoisted the national flag at the Ripon Building complex

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.