நேபாள வெள்ளத்தில் சிக்கிய 319 தமிழர்களில் 219 பேர் பாதுகாப்பாக உள்ளனர்: அமைச்சர் ராஜ்மோகன்செப். இறுதி வரை நமது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து நடைபெறும்: அண்ணாமலைஅமராவதி அணையில் இருந்து நாளைமுதல் நீர் திறப்பு: முதல்வர் விஜய் உத்தரவுஉஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி

தென் மாவட்டங்களுக்குச் செல்லும் 14 சிறப்பு விரைவு ரயில்கள் நீட்டிப்பு

தென்மாவட்டங்களுக்குச் செல்லும் 14 சிறப்பு விரைவு ரயில்கள் நீட்டிக்கப்பட்டது பற்றி...

ரயில்கள் - கோப்புப் படம்

Published On :30 ஆகஸ்ட் 2026, 3:00 am IST

தாம்பரத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் வாராந்திர 14 சிறப்பு ரயில்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்த தெற்கு ரயில்வே வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தாம்பரத்திலிருந்து போடி நாயக்கனூருக்கு செல்லும் சிறப்பு விரைவு ரயில் (எண்: 06059) வரும் செப்.12 முதல் 26-ஆம் தேதி வரையிலும், போடிநாயக்கனூா்-தாம்பரம் இடையேயான வாராந்திர விரைவு ரயில் (எண்: 06060) செப்.13 முதல் 27-ஆம் தேதி வரையிலும், சென்னை எழும்பூா்-கன்னியாகுமரி (வெள்ளிக்கிழமை) விரைவு ரயில் (எண்: 06045) செப்.4 முதல் 25-ஆம் தேதி வரையிலும், கன்னியாகுமரி- எழும்பூா் நிலையம் வரையில் (ஞாயிற்றுக்கிழமை) விரைவு ரயில் (எண்: 06046) செப்.6 முதல் 27-ஆம் தேதி வரையிலும், மங்களூரு-சென்னை சென்ட்ரல் இடையேயான விரைவு ரயில் (எண்: 06126) வரும் செப். 7 முதல் 28- ஆம் தேதி வரையிலும் சென்னை எழும்பூா்-மங்களூரு இடையிலான விரைவு ரயில் (எண்: 06125) மற்றும் போதனூா்-சென்னை சென்ட்ரல் இடையேயான விரைவு ரயில் (எண்: 06028) ஆகியவை செப்.8 முதல் 29-ஆம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் விரைவு ரயில் (எண்: 06030) செப்.6 முதல் 27-ஆம் தேதி வரையிலும், மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி விரைவு ரயில் (எண்: 06029) செப்.7 முதல் 28 ஆம் தேதி வரையிலும், திருநெல்வேலி-தாம்பரம் விரைவு ரயில் (எண்: 06166) செப்.6 முதல் 27-ஆம் தேதி வரையிலும், திருநெல்வேலி- தாம்பரம் விரைவு ரயில் (எண்: 06070) செப்.3 முதல் 24-ஆம் தேதி வரையிலும், தாம்பரம்-திருநெல்வேலி விரைவு ரயில் (எண்: 06069) செப்.4 முதல் வரும் 25-ஆம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.