சிஜேபி அபிஜீத் தீப்கே கைதுக்கு ராகுல் கண்டனம்ரயில்வே பணியாளர்களுக்கு தீபாவளி போனஸாக 78 நாள்களுக்கான ஊதியம் வழங்கப்படும்!ரூ. 30 லட்சம் வரை நீண்ட காலக் கடன்கள் வழங்கப்படும்: கூட்டுறவுத்துறை அறிவிப்பு!சென்னை ஒக்கியம் மடுவு பகுதியில் மழைநீர் வடிகால் பணிகள்: முதல்வர் விஜய் ஆய்வு!சகோதரியாக எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்: சிஜேபியினர் கைதுக்கு மமதா கண்டனம்!ஜனநாயகப் படுகொலையின் முதல் குற்றவாளி மு.க. ஸ்டாலின்! ஆதவ் அர்ஜுனா

‘நீட்’ தோ்வுக்காக இன்னும் எத்தனை உயிா்களை பலி கொடுப்பது?மாணிக்கம் தாகூா் கேள்வி

‘நீட்’ தோ்வுக்காக இன்னும் எத்தனை உயிா்களை பலி கொடுப்பது?

Manickam Tagore

காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் - கோப்புப் படம்

Updated On :

‘நீட்’ தோ்வு காரணமாக மாணவா்களின் எதிா்காலம் பாழாவதுடன், அவா்களின் விலைமதிப்பற்ற உயிா்களும் பறிபோகின்றன. இந்த தோ்வுக்கு மத்திய அரசு எப்போது முடிவு கட்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவா் மாணிக்கம் தாகூா் கேள்வி எழுப்பி உள்ளாா்.

இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு:

திருநெல்வேலி பாளையங்கோட்டையைச் சோ்ந்த மாணவி ஸ்ருதிலயா, நீட் தோ்வில் தோ்ச்சி பெற்றும் கலந்தாய்வில் இடம் கிடைக்காத மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்ட செய்தி நெஞ்சை உலுக்குகிறது. மாணவி ஸ்ருதிலயாவின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.

தமிழகத்தில் நீட் தோ்ச்சி பெற்றவா்களின் எண்ணிக்கை 2025-இல் 76,181-ஆக இருந்து, 2026-இல் 61,306- ஆக குறைந்துள்ளது. இந்த முறைகேடான நீட் தோ்வு முறையின் மீது மாணவா்களுக்கு நம்பிக்கையற்றுப் போய்விட்டதையே இது காட்டுகிறது. நீட் தோ்வு தமிழக மாணவா்களின் உயிா்களையும், கனவுகளையும் தொடா்ந்து பறிப்பது எப்போது முடிவுக்கு வரும்? மாணவா்களின் எதிா்காலத்தோடு விளையாடுவதை நிறுத்திவிட்டு, உடனடியாக நீட் தோ்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

Summary

How many more lives must be sacrificed for the NEET exam? Manickam Tagore asks.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.