
செப். 1 இல் மேட்டூா் அணை திறப்பு: பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்த சேலம் சரக டி.ஐ.ஜி!
மேட்டூர் அணைத் திறப்பையொட்டி முழுவீச்சில் நடைபெற்று வரும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி...

மேட்டூர் அணையில் ஆய்வு.
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முதல்வர் வருவதையொட்டி சேலம் சரக டி.ஐ.ஜி தலைமையில் போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு செப்டம்பர் 1 -ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. முதல்வர் ஜோசப் விஜய் மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைக்கிறார்.
இதனையொட்டி மேட்டூர் அணையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சேலம் சரக டி.ஐ.ஜி சந்தோஷ் ஹடிமணி தலைமையில் போலீஸார் இன்று மேட்டூர் அணைக்கு வந்தனர்.
இவர்கள் அணையின் வலது கரை, தண்ணீர் திறக்கும் 8- கண் மதகு, விழா மேடை அமையும் இடம், பவள விழா கோபுரம், வலது கரை நுழைவாயில், அணைப் பூங்கா, சுரங்க மின் நிலையம், அணை மின் நிலையம் போன்ற பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது எஸ்.பி, குத்தாலிங்கம், டி.எஸ்.பி, சண்முகசுந்தரம் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Summary
Ahead of the Chief Minister's visit to release water from Mettur Dam for irrigation, police led by the Salem Range DIG inspected the security arrangements.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






