FOLLOW US

ON GOOGLE DISCOVER

உஸ்பெகிஸ்தானில் பிரதமா் மோடிக்கு உற்சாக வரவேற்பு! கிா்கிஸ்தானில் எஸ்சிஓ மாநாட்டில் நாளை பங்கேற்பு!நேபாள வெள்ளம்: பலி 675-ஆக உயா்வு! தொடரும் மீட்புப் பணி; 2,400 போ் நிலை என்ன?2027-28 பட்ஜெட் பணிகள் அக்.12-இல் தொடங்கும்: மத்திய நிதியமைச்சகம்தென் மாவட்டங்களுக்குச் செல்லும் 14 சிறப்பு விரைவு ரயில்கள் நீட்டிப்பு ஆசியக் கோப்பை மகளிா் டி20: தாய்லாந்துடன் இன்று இந்தியா மோதல்சென்னையில் மழைவெள்ள மீட்பு நடவடிக்கைக்கு 1,721 போ்!

தீவிரவாதிகள் கொல்லப்படுவதைக் கண்டு மகிழ்ச்சிதான் ஏற்பட வேண்டும்; கண்ணீர் வரக்கூடாது! தவெக எம்எல்ஏ-வுக்கு நயினார் கண்டனம்

திரையில் தீவிரவாதி தண்டிக்கப்படுவதை ஒரு சமூகத்துக்கு எதிரானதாகக் காட்டுவதாக தவெக எம்எல்ஏ முஸ்தபாவுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

Mustafa | Sivakarthikeyan | Nainar Nagenthran

முஸ்தபா எம்எல்ஏ-வுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

Published On :30 ஆகஸ்ட் 2026, 12:34 pm IST

திரையில் தீவிரவாதி தண்டிக்கப்படுவதை ஒரு சமூகத்துக்கு எதிரானதாகக் காட்டுவதாக தவெக எம்எல்ஏ முஸ்தபாவுக்கு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ முஸ்தபாவுக்கு கண்டனம் தெரிவித்து நயினார் நாகேந்திரன் பதிவிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, "தீவிரவாதிகள் தண்டிக்கப்பட்டால் முஸ்தபாவிற்கு கண்ணீர் வருவது ஏன்?

தவெக எம்எல்ஏ முஸ்தபா, அண்மையில் 'அமரன்' திரைப்படம் குறித்து வெளியிட்டுள்ள கருத்துக்கள் அதிர்ச்சியையும், கடும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளன. பாரதத் தாயின் மண்ணைக் காக்கத் தன் இன்னுயிரைத் தியாகம் செய்த மேஜர் முகுந்த் வரதராஜனின், வீர வரலாற்றைப் போற்றும் 'அமரன்' திரைப்படத்தை, ஏதோ ஒரு சமூகத்திற்கு எதிரானது போலச் சித்திரிக்க முயலும் முஸ்தபாவின் வஞ்சக அரசியல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

பாகிஸ்தான் தீவிரவாதிகளைப் பற்றிய உண்மைக் கதையைப் படமாக எடுத்தால், அது எப்படி இஸ்லாமியர்களை இழிவுபடுத்துவதாக அமையும்?

ஒரு பயங்கரவாதி தண்டிக்கப்படுவதை முஸ்தபா ஏன் சகித்துக்கொள்ள மறுக்கிறார்? பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்படுவதைக் கண்டு ஒரு இந்தியக் குடிமகனுக்கு மகிழ்ச்சிதான் ஏற்பட வேண்டுமே தவிர, முஸ்தபாவைப் போலக் கண்ணீர் வரக்கூடாது.

உங்களது அனுதாபம் இந்திய ராணுவத்திற்கா அல்லது எல்லையைத் தாண்டி வரும் பயங்கரவாதிகளுக்கா? மேலும், முதல்வர் ஜோசப் விஜய் நடிப்பில் உருவான 'துப்பாக்கி' திரைப்படத்திலும் தீவிரவாதிகள் தொடர்பான காட்சிகளை நீக்க வைத்ததாகத் தம்பட்டம் அடித்துக்கொள்கிறார் முஸ்தபா.

திரையில் தீவிரவாதி தண்டிக்கப்படுவதை ஒரு சமூகத்துக்கு எதிரானதாகக் காட்டி, தமிழகத்தின் அமைதியைச் சீர்குலைக்கத் துடிக்கும் முஸ்தபாவின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது.

முஸ்தபா போன்றவர்களின் இத்தகைய நச்சுப் பேச்சுக்களைத் தமிழக முதல்வர் விஜய் உடனடியாகக் கண்டிக்க வேண்டும். இல்லையெனில், இதுதான் தவெகவின் அதிகாரபூர்வ நிலைப்பாடு என்பதாக தமிழக மக்கள் புரிந்துகொள்வார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

Summary

BJP Chief Nainar Nagenthran condemns TVK MLA Mustafa

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.