சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

வேலூர்: வெட்டுவானம் எல்லையம்மன் கோயிலில் மயங்கி விழுந்து பெண் பலி

வெட்டுவானம் எல்லையம்மன் கோயிலில் மயங்கி விழுந்து பெண் பலியானது பற்றி....

Vellore: Woman collapses and dies at Vettuvanam Ellaiyamman Temple

எல்லையம்மன் கோயில்.

Published On :30 ஆகஸ்ட் 2026, 3:32 pm IST

பள்ளிகொண்டா அடுத்துள்ள வெட்டுவானம் எல்லையம்மன் கோயிலில் மயங்கி விழுந்து பெண் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்துள்ள வெட்டுவானம் எல்லையம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்யச் சென்ற அதே பகுதியைச் சேர்ந்த மற்றும் தற்போது காஞ்சிபுரத்தில் வசித்து வரும் மேகலா (65) கோயில் கொடி மரம் அருகே திடீரென மயங்கி விழுந்து பலியானார்.

முதற்கட்ட விசாரணையில் நெஞ்சுவலி காரணமாக பலியாகியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. கோயிலில் பெண் பலியானதால் கோயில் நடை தற்காலிகமாக மூடப்பட்டு பரிகார பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் சம்பவ இடத்துக்கு வந்த பள்ளிகொண்டா போலீஸார் உடலை மீட்டு குடியாத்தம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Summary

A woman collapsed and died at the Vettuvanam Ellaiyamman Temple near Pallikonda, causing widespread grief.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.