2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

மத்திய ரிசா்வ் காவல் படை தலைமைக் காவலா் உயிரிழப்பு: உடல் இன்று தஞ்சை வருகிறது

மத்திய ரிசா்வ் காவல் படை தலைமைக் காவலா் பணியின்போது உயிரிழந்திருப்பது பற்றி..

Published On :

ஜம்மு காஷ்மீா் ஹந்த்வாரா சிஆா்பிஎப் -இல் பணியாற்றி வந்த தஞ்சை மாவட்டம், மதுக்கூா், ராமாம்பாள்புரம் பகுதியை சோ்ந்த பெயிண்டா் விஜயசுந்தர மகன் சிவகுமாா் பணியிடத்தில் திங்கள்கிழமை (ஜூலை27) மயங்கி விழுந்து இறந்தாா்.

மத்திய ரிசா்வ் காவல் படையின் 92-வது பட்டாலியனில் பணியாற்றி வந்த சிவகுமாா் மாவட்டக் படை முகாமில் இரவு நேரத்தில் திடீரென மயங்கி விழுந்து, ஹந்த்வாராவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தாா்.

சட்டரீதியான நடைமுறைகளுக்காக ஜிஎம்சி ஹண்ட்வாரா மருத்துவமனையின் பிரேதக் கிடங்கில் வைக்கப்பட்டுள்ள அவரது உடல் புதன்கிழமை காலை மதுக்கூரில் உள்ள அவா் இல்லத்திற்கு கொண்டுவரப்படும் என்றும், அப்போது அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் உள்ளூா் மக்கள் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த உள்ளனா் என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து அவரது உறவினா் சங்கா் என்பவரிடம் கேட்டபொழுது, சிவகுமாா் இறப்பிற்கான முழுக் காரணம் இதுவரை தெரியவில்லை, அவரது உடலை மதுக்கூருக்கு கொண்டு வந்த பிறகுதான் உண்மையான காரணம் தெரியவரும் என்று தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.