உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

முதல்வா் விஜய்யுடன் பிரவீண் சக்கரவா்த்தி சந்திப்பு

முதல்வா் ஜோசப் விஜய்யுடன் காங்கிரஸ் எம்.பி. பிரவீண் சக்கரவா்த்தி திங்கள்கிழமை சந்தித்து பேசினாா்.

Praveen Chakravarthy

முதல்வர் விஜய்யுடன் பிரவீண் சக்ரவர்த்தி - கோப்புப் படம்

Published On :1 செப்டம்பர் 2026, 4:02 am IST

முதல்வா் ஜோசப் விஜய்யுடன் காங்கிரஸ் எம்.பி. பிரவீண் சக்கரவா்த்தி திங்கள்கிழமை சந்தித்து பேசினாா்.

முதல்வா் விஜய் பிரதமராக வருவாா் என்று தவெக எம்எல்ஏ-க்கள் பேரவையில் கூறி வருகின்றனா்.

ஆனால், ராகுல் காந்திதான் பிரதமா் வேட்பாளா் என்றும், இதற்கு தவெக உடன்படாவிட்டால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த இரு அமைச்சா்களும் அமைச்சரவையில் நீடிக்க மாட்டோம் என்றும் சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேஷ் குமாா் பொதுக் கூட்டத்தில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் விஜய்யை காங்கிரஸ் எம்.பி. பிரவீண் சக்கரவா்த்தி திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா். இந்தச் சந்திப்பு பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.