ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தி ஜெர்மனி 4-வது முறை சாம்பியன்! தகவல் தொடா்புக்கு ஆபாச இணையதளங்களை பயன்படுத்தும் காஷ்மீா் பயங்கரவாதிகள்!ரூ. 47,750 கோடி வா்த்தக இலக்கு: இந்தியா - உஸ்பெகிஸ்தான் முடிவு! முதுநிலை நீட் தேர்வு: 2.63 லட்சம் போ் எழுதினா்! இரு மையங்களில் மறுதோ்வு நடத்த முடிவு! மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்று எஸ்சிஓ உச்சிமாநாடு: மோடி, புதின், ஷி ஜின்பிங் பங்கேற்புவெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு தகுதிச்சான்று: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்திமுகவில் 6 லட்சம் பதவிகளுக்கு உள்கட்சித் தேர்தல்ரஷியாவுக்கு பெட்ரோல் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடானது இந்தியா

கொடியேற்றத்துடன் தொடங்கியது திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித் திருவிழா!

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றம் பற்றி...

Tiruchendur Avani festival begins with a grand flag hoisting ceremony!

திருச்செந்தூர் முருகன் கோயில்.

Published On :2 வினாடிகள் முன்பு

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா திங்கள்கிழமை அதிகாலை (ஆக. 31) கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.

அரோகரா முழக்கத்துடன் திரளான பக்தர்கள் கொடியேற்ற நிகழ்வைக் கண்டு மகிழ்ந்தனர். 12 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, செப்டம்பர் 9ஆம் தேதி தேரோட்டம் நடக்க உள்ளது. முன்னதாக திங்கள்கிழமை அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், உதய மாா்த்தாண்ட அபிஷேகத்தைத் தொடா்ந்து, காலை 5.15 மணிக்கு திருவிழா கொடியேற்றப்பட்டது.

தொடர்ந்து இன்று மாலை அப்பா் சுவாமிகள் கோயிலில் இருந்து தங்கச் சப்பரத்தில் புறப்பட்டு வீதிகளில் உழவாரப்பணி செய்யும் நிகழ்ச்சி, இரவு ஸ்ரீபெலி நாயகா் அஸ்திர தேவருடன் பல்லக்கில் 9 சந்திகளில் வீதியுலா வரும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகின்றன.

செப். 4 ஆம் தேதி ஐந்தாம் திருவிழாவை முன்னிட்டு மேலக் கோயிலில் இரவு 7.30 மணிக்கு குடைவரைவாயில் தீபாராதனை நடைபெற்று சுவாமியும், அம்மனும் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் வீதியுலா வருதல், செப். 5 காலை கோ ரதம், இரவு வெள்ளி ரதம் வீதியுலா வருதல், செப். 6 அதிகாலை 5 மணிக்கு சண்முகப் பெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி, 9 மணிக்கு சுவாமி சண்முகப் பெருமான் வெட்டி வோ் சப்பரத்தில் பிள்ளையன் கட்டளை மண்டபத்தை சேருதல், மாலை 4 மணிக்கு சுவாமி தங்கச் சப்பரத்தில் சிவப்பு சாத்தியில் வீதியுலா வருதல், செப். 7 காலை 5 மணிக்கு பெரிய வெள்ளிச் சப்பரத்தில் வெள்ளை சாத்தியில் சுவாமி வீதியுலா வந்து மேலக்கோயில் சேருதல், நண்பகல் 12 மணிக்கு பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தியில் சுவாமி வீதியுலா வந்து கோயில் சேருதல், செப். 9 காலை 7 மணிக்கு தேரோட்டம் ஆகியவை நடைபெறுகின்றன.

Summary

The grand Avani festival commenced with a flag hoisting ceremony at the Tiruchendur Subramaniyaswami Temple on Monday (Aug. 31).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.