மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு புதிய திட்டங்கள் ஏதுமில்லை என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “எப்படியும் தோல்வி உறுதி என்பதால் தமிழ்நாட்டை மீண்டும் புறக்கணித்த ஒன்றிய பாஜக அரசு. தமிழ்நாட்டுக்குப் புதிய திட்டங்களும் இல்லை.

X | M.K.Stalin
ஏற்கெனவே வரவேண்டிய ஜல் ஜீவன் மற்றும் கல்வி நிதியும் இல்லை; அட, வழக்கமாகச் சொல்லும் திருக்குறள் கூட இம்முறை இல்லை.
அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட் கேட்டால், 5 ஆண்டுத் திட்டம் போல வாசித்திருக்கிறார்கள். மொத்தத்தில், மத்திய பட்ஜெட் 2026 என்பது ஏமாற்ற பட்ஜெட்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழகத்துக்கு துரோகமிழைக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி என்று பதிவில் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, மத்திய பட்ஜெட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பின்மை, வீழ்ச்சியடைந்து வரும் உற்பத்தி, மூலதனத்தை இழந்துவரும் முதலீட்டாளர்கள், சரிந்து வரும் வீட்டு சேமிப்பு, விவசாயிகளின் நிலைமை, உலகளாவிய அதிர்ச்சி நிலைமை ஆகிய அனைத்தும் மத்திய பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டு விட்டதாக ராகுல் காந்தியும் குற்றம் சாட்டியுள்ளார்.
Summary
National Democratic Alliance betrays Tamilnadu: CM Stalin slams Union Budget 2026
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது! முதல்வர் விஜய்யை விமர்சித்த ஸ்டாலின்!

ரூ. 1,000 கூட தராமல் இழுத்தடிப்பதுதான் மாற்றமா? முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கேள்வி

தூய அரசியல் என்று சொல்லிவிட்டு அழுக்கு அரசியல் செய்கிறார் விஜய்! மு.க. ஸ்டாலின்
மு.க. ஸ்டாலின், இபிஎஸ் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்த முதல்வர் விஜய்!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



