சென்னையில் திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஐடி விங் நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் சந்திப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் உரையாற்றுகையில், நாம் செய்தது மக்களுக்கு தெரிய வேண்டும் என்றால் முதலில் நாம் அதைப் பற்றி முழுமையாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்! அதனால், என்னுடைய பேஜை ஃபாலோ செய்வது போன்றே, முதலமைச்சர் அலுவலகப் பக்கம், நம்முடைய கட்சியின் பக்கங்கள், அரசு செய்தித் துறையின் பக்கங்கள் அனைத்தையும் தொடர்ந்து ஃபாலோ செய்யுங்கள். நம்முடைய ஐ.டி.விங்-கின் வாட்ஸ்அப் சேனலை மற்றவர்களை ஃபாலோ செய்ய வையுங்கள். ஏன் என்றால், சாதனைகளையே ஈசியாகச் செய்யும் நாம், அதை மக்களிடம் கொண்டு செல்வதில் மெத்தனமாக இருக்கக் கூடாது! அனைத்து ஊரிலும் தினமும், தி.மு.க.வின் செயல்பாடுகள், திட்டங்கள், சாதனைகள்தான் பேசுபொருளாக இருக்க வேண்டும்! தேர்தல் வரைக்கும் இடைவெளியே விடாதீர்கள்!