சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாட்டில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ள நிலையில் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியும் மும்முரமாக நடைபெறத் தொடங்கியுள்ளன.
அந்தவகையில் அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செம்மலை, வளர்மதி, ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றுள்ளனர்.
தேர்தல் அறிக்கை தொடர்பாக மக்களிடம் குறிப்பாக விவசாயிகள், தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், மாணவர்களிடையே கருத்து கேட்க குழு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.