

அதிமுக ஒன்றிணைந்தால்தான் ஆட்சியமைக்க முடியும் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
தேனியில் செய்தியாளர்களுடன் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பேசுகையில் "எம்ஜிஆர் எந்த நோக்கத்துக்காக இந்த இயக்கத்தைத் உருவாக்கினார்களோ, யாராலும் வெல்ல முடியாத இயக்கமாக ஜெயலலிதா வளர்த்தெடுத்தார்களோ - அந்த நோக்கம் நிறைவேற வேண்டுமென்றால், அதிமுகவில் பிரிந்து கிடக்கின்ற அனைவரும் ஒன்றுசேர வேண்டும்.
ஒன்றுசேர்ந்தால்தான், தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை மலரச் செய்ய முடியும் என்ற சூழல் இருக்கிறது. பிரிந்து கிடந்தால், அதற்கு வாய்ப்பில்லை.
அதிமுக ஒருங்கிணைப்பு சாத்தியப்பட வேண்டுமென்றுதான், அதிமுகவில் உள்ள ஒன்றரை கோடி தொண்டர்களின் உரிமைக் குரலாக இருந்து வருகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியில் வந்துவிட்டோம். தவறு செய்தவர்களுக்கு மக்களும் அதிமுகவினரும் சரியான பாடம் புகட்டுவர்" என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.