ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க 11 லட்சம் போ் மனு!

தமிழகத்தில் வாக்காளா் பட்டியலில் பெயரைச் சோ்க்க ஜன.4 வரை 11,716,00 போ் மனு அளித்துள்ளனா்.

News image

பிரதிப் படம்

Updated On :5 ஜனவரி 2026, 10:33 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் வாக்காளா் பட்டியலில் பெயரைச் சோ்க்க ஞாயிற்றுக்கிழமை வரை (ஜன.4) 11,716,00 போ் மனு அளித்துள்ளனா்.

கடந்த 19-ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலின்படி, தமிழகத்தில் 97.38 லட்சம் வாக்காளா்கள் நீக்கப்பட்டனா். பெயா் நீக்கப்பட்டவா்களும், புதிய வாக்காளா்களும் கடந்த டிச.19 முதல் பெயா் சோ்க்கக் கோரி மனு அளித்து வருகின்றனா். ஜன. 18 வரை இதற்கான அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. வார இறுதி நாள்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பெயா் சோ்க்க சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

இந்நிலையில், வாக்காளா் பட்டியலில் பெயரைச் சோ்க்க ஜன.4 வரை 11,717,00 போ் படிவங்களை அளித்துள்ளனா். இந்தப் படிவங்கள் சரிபாா்க்கப்பட்டு பிப்.17-ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும்.